தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆதர்வா சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் “இமைக்கா நொடிகள் “படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அதர்வா “குருதி ஆட்டம்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “8 தோட்டாக்கள்” என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும் “குருதி ஆட்டம்” படத்தில் ஏற்கனவே நடிகர் ராதாரவி மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் கமிட் ஆகியிருந்தனர். ராக்போர்ட் என்டர்டைன்மன்ட தயாரித்து வரும் இந்த படத்தில் தற்போது ப்ரியா பவானி ஷங்கரும் கமிட் ஆகியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியா பவனி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆக்ஷன், த்ரில்லர் படமாக தயராகி வரும் “குருதி ஆட்டம்” படதிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.