விஜய்க்கு நெருங்கிய உறவினராக மாறப்போகும் அதர்வா.! எப்படி தெரியுமா ?

0
26844
vijay-atharva
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு நடிகர் அதர்வா சொந்தக்காரராக போகிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த நியூஸ் குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை இணையங்களில் தெரிவித்து வருகின்றனர்.அதர்வா வேற யாரும் இல்லைங்க நம்ம தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான முரளியின் மகன் ஆவார்.அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். மேலும், 2010 ஆம் ஆண்டு திரையரங்கில் வெங்கடேஷ் தயாரித்து இயக்கிய ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for vijay

மேலும் அதர்வாவின் முதல் படமே சூப்பர் ஹிட்டாயிருச்சி.இதனைத்தொடர்ந்து அதர்வாவுக்கு பட வாய்ப்புகள் நிறைய கிடைத்தது என்று கூட சொல்லலாம். தற்போது உள்ள ட்ரெண்டிங் ஹீரோக்களில் அதர்வாவும் ஒருவர்.இதைத்தொடர்ந்து அதர்வாவும் விஜய் அவர்களும் உறவினர்களாக மாற போகிறார்கள் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் இது எப்படி நடக்கும்? ஒன்னும் புரியல? என குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் உள்ளார்கள். இந்த தகவல் குறித்து இணையங்களில் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.அது என்னனாங்க அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி என்பவர் நடிகர் விஜய் அவர்களின் நெருங்கிய உறவுக்காரப் பெண்ணை காதலிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. மேலும், இவர்கள் காதல் குறித்து இரு வீட்டார்களும் தீவிரமாக பேசி வருகின்றார்கள்.

இதையும் பாருங்க : இறுதியில் ஒன்றாக சந்தித்த பிக் பாஸ் பிரபலங்கள்.! லாஸ்லியா ரசிகர்கள் நிம்மதி.!

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பேச்சுவார்த்தையும், ஆலோசனையும் நடந்து வருகிறது. நடிகர் விஜய்,நடிகர் அதர்வா ஆகிய இவர்களின் இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள். ஆனால், இந்த திருமணத்தில் மத பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக அதர்வா தன் தம்பிக்காக முன்னின்று விஜய் அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் பேசி வருகிறார் என்ற தகவல் வெளிவந்தது.அதுமட்டும் இல்லைங்க அதர்வா தம்பி ஆகாஸூம் ,அந்த பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் உயிர்க்கு உயிருக்காக காதலிக்கிறாங்களாம்.அதனால் தான் அதர்வா இந்த அளவு முயற்சி செய்கிறார். மேலும், இவர்களின் திருமணம் குறித்து விரைவில் இணையங்களில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Image result for atharva brother

அதோடு கூடிய விரைவில் இவர்களுக்கு திருமணமும் நடக்க போகிறது என்று கூறப்படுகிறது .இதனை தொடர்ந்து அதற்கான உறுதியான தகவலையும் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார். அப்ப தளபதி விஜய்யும், அதர்வாவும் சொந்தக்கார்கள் ஆகப் போகிறார்களா ! செம தூள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.ஏற்கனவே விஜய் அவர்கள் பிகில் இசை வெளியீட்டு விழா மேடையில் அரசியல் சம்பந்தமாக பேசியுள்ளார் என்று அதிமுக கட்சியினர் கோபத்திலும் கடுப்பிலும் உள்ளார்கள்.இதனால் பல பிரச்சனைகளும், சர்ச்சைகளும் போய் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அதர்வா அவர்களின் தம்பியின் காதல் குறித்து போய்க்கொண்டிருக்கின்றன. பாவம் நம்ம தளபதி எத்தனை பிரச்சினை தான் சமாளிக்க போகிறாரோ ? மேலும்,பிகில் படம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? என்ற கேள்வியில் விஜய்யும் ரசிகர்களும் உள்ளன.

-விளம்பரம்-
Advertisement