இறுதியில் ஒன்றாக சந்தித்த பிக் பாஸ் பிரபலங்கள்.! லாஸ்லியா ரசிகர்கள் நிம்மதி.!

0
7842
losliya
- Advertisement -

தமிழில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.மேலும், அனைவரும் எதிர்பார்த்து ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்சி சிறப்பாக முடிவடைந்தது.மேலும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் தான் என்று அறிவித்தார்கள்.இதனைத்தொடர்ந்து இரண்டாவது வெற்றியாளராக சாண்டி என்று அறிவித்தது பிக் பாஸ் குழு. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 வேற லெவல் கூட சொல்லலாம்.விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சிறப்பாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள்.

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சு உடனே எல்லா போட்டியாளர்களும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஃபன் பண்ணிட்டு சந்தோஷமா இருக்குறாங்க.எல்லாருக்குமே தெரியும் லாஸ்லியா ஒரு குறும்புக்கார, சுட்டித்தனமான பெண். மேலும் அவளுடைய ஒவ்வொரு சுட்டித்தனமும் ரொம்ப க்யூட்டாக, அழகாகவும் இருக்கும். இதனால் தான் லாஸ்லியா தமிழ் இளைஞர் ரசிகர்களின் மனதில் அதிக இடம் பிடித்தார். ஆனால்,லாஸ்லியாவை மட்டும் தான் சமூக வலைத்தளங்களில் காணோம் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சவுடன் லாஸ்லியா கண்ணிலேயே படலையே என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தார்கள்.

இதையும் பாருங்க : முகெனின் சத்தியமா பாடலை கிட்டார் வாசித்தபடி பாடிய விஜய் டிவி பாவனா.!

- Advertisement -

ஆனா இப்பதான் லாஸ்லியா ஃபேமிலியுடன் நேரம் ஒதுக்கி விட்டு பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்களுடன் தொடர்ந்து நேரில் சந்தித்து பேசி வருகிறாராம்.அப்படி லாஸ்லியா சமீபத்தில் நடந்த வனிதா வீட்டில் நடந்த பங்ஷனில் கலந்து கொண்டார். அந்த பங்க்ஷன்ல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டார்கள்.மேலும், அந்த புகைப்படத்தை பார்க்கும் போது வனிதா வீட்டுல தான் பங்க்ஷன் போல இருக்கு.அதுவும் வனிதா மகளுக்கு தான் ஏதோ சடங்கு பங்ஷன் போல .வனிதா யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும், சிம்பிளாகவும் முடித்துவிட்டார். இந்த வனிதா வீட்டு விஷேசத்தில் லாஸ்லியா உடன் சேரன், பாத்திமா பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்களோடு வனிதாவின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.வனிதா வீட்டு நிகழ்ச்சிக்கு பிறகு அபிராமி உடன் லாஸ்லியா சேர்ந்து ஜாலியாக ஃபன் பண்ணிட்டு இருந்தாங்க.இதனை பார்க்கும்போது லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு குஷியாக இட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கூட சேரன் வீட்டுக்கு சாக்ஷி,ஷெரின் ஆகிய இரண்டு பேரும் போய் இருந்தாங்களா.சாண்டி வீட்டுக்கு கவின் போய் லாலா பாப்பாவுடன் சூப்பராக விளையாடினு இருந்தாரு. தான் இப்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மாத்தி மாத்தி ஒவ்வொருவரின் வீட்டுக்கு சென்று தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

அதோடு பிக்பாஸ் சீசன் முடிந்த உடனேயே சாண்டி மற்ற போட்டியாளர்களுக்கு ஹோட்டலில் டின்னர் பார்ட்டி கொடுத்தாராம் .இதனைத்தொடர்ந்து தற்போது கூட லாஸ்லியா, கவின் காதல் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன இது குறித்து எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அவர்கள் திருமணம் செய்தி விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். மேலும், லாஸ்லியா கவினுவுக்கு திருமணம் நடக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புயும் , வாழ்த்தியும் வருகின்றன.

Advertisement