அட்லீ, ப்ரியாகிட்ட தன் காதலை எங்கே,எப்படி சொன்னார் தெரியுமா ! காதல் கதை !

0
3929

ராஜா ராணி, தெறி, மெர்சல் என மாஸ் படங்களை கொடுத்து தற்போது வீட்டில் மனைவி ப்ரியாவுடன் ஓய்வு எடுத்து வருகிறார் இயக்குனர் அட்லீ. கடந்த 2014ஆம் ஆண்டு அட்லீ மற்றும் அவரது காதலி ப்ரியாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் காதலித்து பெற்றோரரால் நிச்சியிக்கப்பட்ட திருமணம். ஆனால், இயக்குனர் அட்லீக்கும் ப்ரியாவிற்கும் எப்படி காதல் மலர்ந்தது எனத் தெரியுமா?

அட்லீ மற்றும் சிவா கார்த்திகேயன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். அப்போது சிவா ஜோடி நெ.1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். அதில் ப்ரியாவும் இருந்தார்.

இந்த நேரத்தில் சிவாவை பார்க்க அட்லீ வந்துள்ளார். அங்கு ப்ரியாவை பார்த்ததும் பிடித்துவிட்டது. ஆனால், பின்னர் குறும்புக்கார அட்லீ என்ன செய்தார் தெரியுமா? அவர் பேசுவதற்கு பதில் இரு வீட்டாரையும் பேச வைத்து பேமலி பிரண்ட்ஸ் ஆகி விட்டார் அட்லீ குமார்.

Priya, Atlee

பின்னர், கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த நட்பு நீடித்துள்ளது. பின்னர், ப்ரியாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். ஒரு 8 நண்பர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ப்ரியா இந்த விஷயத்தை கூறியுள்ளார்.

அது போக ஜாதகத்தினால் மாப்பிள்ளை செட் ஆகவில்லை எனவும் கூறியுள்ளார். உடனடியாக சுதாரித்த அட்லீ, இதற்கு மேல் போனால் கை நழுவி விடும் என என்ன செய்தார் தெரியுமா?

8 பேர் முன்னிலையிலும் ‘நான் வேணா என்னோட ஜாதகத்த தரட்டா?’ என சரியான நேரத்தில் கோல் போட்டுள்ளார் மூளைக்கார அட்லீ. அப்போது சிரித்து விட்டு விளையாடாதடா எனக் கூறிவிட்டு சென்றுள்ளார் ப்ரியா.
ஆனால், வீட்டுக்கு சென்று அட்லீக்கு போன் செய்து, உண்மையாதான் அப்படி கேட்டயா? எனக் கேட்க. ஆம், என அட்லீ கூற, வீட்டில ஜாதகம் பரிமாற பின்னர் 2014ல் சென்னையில் பிரபல ஹோட்டலில் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது தான் தெரிகிறது அட்லீ எப்படி ராஜா ராணி கதையை எழுதினார் என.