திருமணநாள் குறித்து ஃப்ரியா அட்லீ பதிவிட்டு இருக்கும் ரொமான்ஸ் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

Advertisement

அட்லீ திரைப்பயணம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ – ப்ரியா திருமணம்:

இதனிடையே அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சோசியல் மீடியாவில் ப்ரியா அட்லீ:

மேலும், ப்ரியா அட்லீ எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன் கணவருடன் எடுக்கும் போட்டோ, வீடியோ என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இந்நிலையில் ப்ரியா தன்னுடைய திருமண நாள் குறித்து போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதாவது, நவம்பர் 9ஆம் தேதி அட்லீ-பிரியாவின் திருமணநாள். இவர்களுக்கு திருமணம் ஆகி நேற்றோடு எட்டு ஆண்டுகள் முடிவடைந்து இருக்கிறது.

Advertisement

ப்ரியா அட்லீ ரொமன்ஸ் போஸ்ட்:

இதை ஃப்ரியா அட்லீ தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. என்றென்றும் இதே போல் செல்ல வேண்டும். எனது அன்பான கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் தான் என் பலவீனம், அதேபோல் நீங்கள் தான் என் பலம். என் எல்லாமே நீங்கள்தான். என்றென்றும் நான் உங்களை காதலிக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement