அம்பானி வீட்டு திருமணம் – முதன் முறையாக தனது மகனின் முகத்தை வெளியுலகிற்கு காட்டிய அட்லீ – அப்படியே அட்லீ தான்.

0
536
- Advertisement -

மகனின் முகத்தை முதன் முறையாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார் அட்லீ. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். விஜயை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

- Advertisement -

மேலும் படிக்க : 12 ஏக்கரில் ரஜினி கட்டும் மருத்துவமனை, எங்கு தெரியுமா? அதிலும் இப்படி ஒரு சலுகையுடன்.

அட்லீ – ப்ரியா திருமணம்:

அட்லீ அவர்கள் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அவர்கள் விஜய் டிவி கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா, அட்லீயை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

அட்லீயின் மகன் மீர் :

இப்படி ஒரு நிலையில்கடந்த ஆண்டு அட்லீ – பிரியாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இப்படி ஒரு நிலையில் தங்கள் மகனுக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் தனது மகனின் முகத்தை முதன் முறையாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார் இயக்குனர் அட்லீ.

ஆனந்த் அம்பானி திருமணம் :

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி,  பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் என ஆயிரக்கணக்கான விஐபிக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறியப்பட்ட அட்லீயும் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். அப்போது தனது மகனின் முகத்தை முதன் முறையாக வெளியுலகத்திற்கு காட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement