12 ஏக்கரில் ரஜினி கட்டும் மருத்துவமனை, எங்கு தெரியுமா? அதிலும் இப்படி ஒரு சலுகையுடன்.

0
179
- Advertisement -

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவமனை கட்டும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் மருத்துவமனை கட்டி வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஓம்.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தினை நடிகர் ரஜினிகாந்த் வாங்கி இருக்கிறார். திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு இதற்கான பத்திரப்பதிவு நடந்திருக்கிறது. இந்த 12 ஏக்கரில் ரஜினி அவர்கள் மருத்துவமனை கட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ரஜினி கட்டும் மருத்துவமனை:

அதுவும் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. மேலும், இதுகுறித்து கூடிய விரைவில் ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலருமே பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயிலர் திரைப்படம்:

கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை நெல்சன் இருக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன்லால், தமன்னா, வசந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி.

-விளம்பரம்-

ரஜினி திரைப்பயணம்:

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் பிரதான வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கௌரவ புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ரஜினி நடிக்கும் படங்கள்:

இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் பலரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Advertisement