காதலர் தின வாழ்த்தை கூட ரோஹித் சர்மாவிடம் இருந்து காப்பி அடித்த அட்லீ. நீங்களே பாருங்க.

0
79410
Atlee-Priya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஆனவர் அட்லீ. இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்கு பிறகு அட்லீ அவர்கள் “ராஜா ராணி” என்ற திரை படத்தின் மூலம் சினிமா உலகில் இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து இவர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல் ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார். அந்த இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. பின் கடந்த ஆண்டு மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து பிகில் படத்தை உருவாக்கினார். இந்த படம் வெளி வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இந்த படம் உலக அளவில் நல்ல வசூலை பெற்றது. இப்படி தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளிவந்த 4 படங்களும் நல்ல பெயரையும், புகழையும் வாங்கி தந்தது. மேலும், இயக்குனர் அட்லி இயக்கும் படங்கள் எல்லாமே காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இவர் முதன் முதலாக இயக்கிய ராஜா ராணி படம் மௌன ராகம் படத்தின் தழுவல் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்தது. அதை அட்லி அவர்கள் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. பின் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம் என பல படங்கள் கலந்த கலவையாக உள்ளது என்றும் விமர்சனங்கள் வந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : படுத்தபடி இருக்கும் செல்ஃபீ புகைப்படங்களை பகிர்ந்த பாவனா. ஷாக்கான ரசிகர்கள்.

அதோடு தற்போது வெளிவந்த பிகில் படம் படம் வேறு ஒரு இயக்குனரின் கதை என்று சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் காப்பி மேல் காப்பி என்று புகார்கள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இது குறித்து அட்லீ இடம் கேட்டால் அவர் அதெல்லாம் இல்லை என்று சரியாக பதில் சொல்லாமல் மழுப்பி சென்று விடுகிறார். இந்நிலையில் நேற்று அட்லீ அவர்கள் காதலர் தினத்தை முன்னிட்டு தன் மனைவியுடன் இருக்கும் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஏனென்றால் இந்த செல்ஃபி ரோகித் சர்மா செல்பி போல உள்ளது. அதே மாதிரி தன் மனைவி உடன் எடுத்த செல்பியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார் அட்லீ. இதை பார்த்தவுடன் ரசிகர்கள் செல்பி கூட ரோகித் சர்மாவிடம் இருந்து காப்பி அடிப்பீங்களா. இது அட்லீ காப்பி இல்லை, அட்ட காப்பி என்று பயங்கரமாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement