படுத்தபடி இருக்கும் செல்ஃபீ புகைப்படங்களை பகிர்ந்த பாவனா. ஷாக்கான ரசிகர்கள்.

0
37003
bhavana
- Advertisement -

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன் பின்னர் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை பாவனா அவர்கள் பல மலையாள மொழி படங்களிலும், கன்னட மொழி படங்களிலும் நடித்து உள்ளார். நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார். நவீன் அவர்கள் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரிகொடுத்திருந்தார் . தமிழில் விஜய் சேதுபதி- திரிஷா நடிப்பில் வெளியான படம் “96” . இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்திருந்தனர். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள்திரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மேலும், 96 படம் தமிழில் மிகப் பெரிய அளவு வெற்றி கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த வருடம் தேசிய விருதில் பல பிரிவுகளில் இந்த 96 படம் விருதுகளை தட்டி சென்றது.

- Advertisement -

இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் பஜரங்கி படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இந்த பஜரங்கி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பாவனா நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் ஹர்ஷா ஆவார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

View this post on Instagram

Actress #Bhavana Latest Clicks

A post shared by Behind Talkies (@behindtalkies) on

நடிகை பாவனாவை இதுவரை பார்க்காத அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் பார்க்கலாம் என்று இந்த படத்தின் இயக்குனர் கூறி இருந்தார். நடிகை பாவனா இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் கொஞ்சம் கூட கவர்ச்சி காட்டியதில்லை. இந்த நிலையில் நடிகை பாவனா காதலர் தினத்தை முன்னிட்டு படுத்தபடி இருக்கும் சில செல்ஃபீ புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் அடைந்துள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement