ஐஸ்வர்யா “Nomination”…கிண்டல் செய்த காமெடி நடிகர் சதீஷ்.! இவரும் இப்படி சொல்லிட்டாரே

0
234
Sathish

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பெரும் சர்ச்சையாக இருந்தது ஐஸ்வர்யா எலிமினேட் ஆகாமல் காப்பாற்ற பட்டது தான். நீண்ட வாரத்திற்கு பின்னர் கடந்த வாரம் நாமினேஷனில் வந்த ஐஸ்வர்யா கண்டிப்பாக எலிமினேட் ஆகிவிடுவார் என்று பலரும் நம்பினார். ஆனால், அதற்கு மாறாக சென்ராயன் வெளியேற்றபட்டது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

ஐஸ்வர்யா தொடர்ந்து காப்பற்றபட்டு வருவதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வரும் நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஐஸ்வர்யா கண்டிப்பாக வரவேண்டும் என்று கமல் பரிந்துரைத்ததை அடுத்து நேற்று ஐஸ்வர்யா சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யபட்டார்.

சென்ராயன் வெளியேற்றபட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்திருந்த காமெடி நடிகர் சதீஷ் தற்போது ஐஸ்வர்யா மீன்டும் காப்பற்றபடுவார் என்று கிண்டலடித்துள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேட் ஆனதை குறித்து ட்வீட் செய்துள்ள சதீஸ், யார் நாமினேட் ஆனா என்ன ஐஸ்வர்யா சேவ் அதானே என்று பதிவிட்டுள்ளார்.

Aishwarya

இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற மாட்டார் என்று காமெடி நடிகர் சதீஷ் கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது பலரும் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிடுவாரோ என்று சந்தேகத்தில் இருந்து வருகின்றனர்.