பரத் படக்குழுவினரை கற்கள் வீசி தாக்கிய தாய்லாந்து மக்கள், ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம் – இதான் காரணமாம்.

0
279
- Advertisement -

தாய்லாந்தில் பரத் படக்குழுவினரை ஊர்மக்கள் தாக்கியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரத் திகழ்ந்து வருகிறார். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவர் காதல், வெயில், பட்டியல், எம்டன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவரது சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் புது புது கதைகளத்துடன் படங்களை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காளிதாஸ் படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதேபோல் நடிகர் பரத் அவர்கள் சரண் குமார் இயக்கத்தில் நடுவண் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், பாலா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது நடிகர் பரத்அவர்கள் ஒரு பாலிவுட் படத்திலும், மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தாய்லாந்தில் பரத் படக்குழுவினரை ஊர்மக்கள் தாக்கியுள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

தாய்லாந்தில் நடந்த சம்பவம்:

தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை மையப்படுத்திய கதையில் பரத் நடித்து வருகிறார். 2018 ஆம் ஆண்டு தாய்லாந்தில் பெய்த கனமழையால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலாத்தலமான தாம் லுங் குகைக்குள் 12 பேர் சிக்கி இருந்தனர். அதில் சிறுவர் கால்பந்து அணியும், பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டு இருந்தார்கள். மேலும், ஒன்பது நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கு போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டு இருந்தனர்.

Actor Bharath Emotional Speech At Kalidas Success Meet

பரத் நடிக்கும் படம்:

அப்போது இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் பரத் மலையாளத்தில் படம் நடிக்கிறார். அந்த படத்திற்கு ஆக்சன் 22 என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சந்திரன் திக்கோடி என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களின் பயிற்சியாளராக நடிக்கிறார். இவரை தவிர சபரீஷ் வர்மா,இர்ஷாத் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லிஞ்சு எஸ்தப்பன் இயக்குகிறார்.

-விளம்பரம்-

படக்குழுவை தாக்கிய தாய்லாந்து மக்கள்:

மேலும், இந்த சம்பவம் நடந்த இடத்திலேயே படப்பிடிப்பை நடத்த படக்குழு தாய்லாந்துக்கு சென்றிருந்தது. அங்கு அரசு அனுமதியுடன் குகைக்குள் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால், உள்ளூர் மக்கள் தங்களுக்கு பெரும் தொகையை தந்தால் தான் படப்பிடிப்பை நடத்த விடுவோம் என்று தகராறு செய்து இருந்தார்கள். பின் அவர்கள் கேட்ட பணத்தை படக்குழுவினர் கொடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்ட இன்னொரு தரப்பினர் தங்களுக்கும் பணம் தரவேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பு வாகனங்களை சேதப்படுத்தியது மட்டுமில்லாமல் படக்குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இருந்தனர்.

படக்குழு போலீசில் புகார்:

இதுதொடர்பாக படக்குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். இருந்தாலும் இனி தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் இந்தியா திரும்ப படப்பிடிப்பு குழு முடிவு செய்திருந்தார்கள். மேலும், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பை தொடர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், முழு பாதுகாப்பு தருகிறோம் படப்பிடிப்பை நடத்துங்கள் என்று தாய்லாந்து சுற்றுலாத்துறை தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இனி படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்குமா? இல்லை ஐதராபாத்தில் நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement