சென்னையில் ஆட்டோ ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ஆட்டோவில் தவறி விட்டு சென்றுள்ளார். அந்தப் பையை ஆட்டோக்காரர் பணத்துடன் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். எருக்கன்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதரின் ஆட்டோவில் பயணித்த நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவை சேர்ந்த பூர்ணிமா தனது கைப்பையை ஆட்டோவில் தவறி வைத்து விட்டு சென்றுள்ளார்.

அந்தப் பையை கவனித்த ஆட்டோ ஓட்டுனர் ஸ்ரீதர் அதனை வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்தப் பையில் 1.22 லட்சம் ரூபாய் மற்றும் அடையாள அட்டைகள் சான்றிதழ்கள் போன்றவை அந்த பையில் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்த காவல் துறை அவரைக்கு கால் செய்து வரவைத்து காவல்துறையினர் அந்த பையை அவரிடம் ஒப்படைத்தனர். பணத்துடன் பையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு சன்மானமாக 5 ஆயிரத்து வழங்கி நன்றி தெரிவித்தார் பூர்ணிமா.

Advertisement

ஆட்டோகாரர் கூறியது:

இது குறித்து அவர் கூறுகையில் நான் தலைவர் ரசிகன் நான் முப்பது வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறேன் என்று கூறியிருந்தார். அந்தப் பையில் அடையாள அட்டைகள் இருந்ததால் காவல்துறையினர் அவரை எளிதாக வரவழைத்து விட்டனர். நம்ப உழைத்த காசை நம்மளுக்கு உடம்பில் ஒட்டுவதில்லை அடுத்தவர் காசுக்கு எதற்கு ஆசைப்பட வேண்டும் என்று பையை காவல் துறை என்னிடம் ஒப்படைத்து விட்டேன். அந்த பையன் வாங்கிக்கொண்டு எல்லாம் கரெக்டாக இருக்கின்றது என்று விசிட்டிங் கார்டு என்னிடம் கொடுத்தார்கள்.

எனக்கு சன்மானமாக ஐந்தாயிரம் ரூபாய் பணத்தையும் அவர்கள் வழங்கினார்கள். இதுவரை இது போன்ற பெரிய அளவிலான பணம் யாரும் என் ஆட்டோவில் விட்டு சென்றதே இல்லை 30 வருட ஆட்டோ ஓட்டுவதற்கு இதுவே முதல் முறை. குடை அது போன்ற பொருட்களை மட்டுமே விட்டு விட்டு சென்றவர்கள். ஆனால் அதை எடுத்துக் கொண்டு அவரிடமே கொடுத்து விடுவேன். அந்தப் பையை தவறவிட்ட உடன் நானும் சில சில பேரிடம் பையில் எடுத்துக் கொண்டு கொடுக்க சென்றேன்.

Advertisement

ஆனால் அவர்களின் என்னுடைய பை இல்லை என்று கூறினார்கள். அதன் பின் நான் அதை காவல்துறையினரிடம் ஒப்படைத்து விட்டேன். அந்தப் பையில் இருந்து அடையாள அட்டைகளை வைத்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வர வைத்தனர். நான் தலைவருடைய தீவிர ரசிகன் அவருடைய குணம் தான் எனக்கும் மற்றவர்களுடைய பணம் எதற்கு ஆசைப்படக்கூடாது என்று தான் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.நான் தலைவர் ரசிகன் சார் – Real Life மாணிக்கம் போல நடந்து கொண்ட ஆட்டோ ஓட்டுர். நெகிழ்ச்சி சம்பவம்,

Advertisement