அந்த பாட்டு ஹிட் ஆச்சி, ஆனா 17 வருசமா வாய்ப்பு வரல – ஆட்டோகிராப் படத்தின் புல்லாங்குழல் பெருமாளின் சோகக்கதை.

0
1262
perumal
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அதிலும் இந்த கொரோனா வந்ததில் இருந்து பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதே போல கொரோனா பிரச்சனையால் சினிமா துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய நடிகர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பினாலும் சினிமாவை நம்பியுள்ள துணை நடிகர்கள் பலரின் நிலையை இந்த கொரோனா ஊரடங்கு பெரிதும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக சினிமா துறையை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் புல்லாங்குழல் வசித்த பெருமாள் வறுமையால் வாடி வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : ஆண் நபரை கட்டி அனைத்து முத்தும் கொடுக்க செல்லும் ஜூலி – அப்போ மார்க் நிலமை ?

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் ஒரு சில வரிகள் பாடி இருந்த கோமகன், கொரோனா தொற்று ஏற்பட்டு காலமானார். இப்படி ஒரு நிலையில் பெருமாள் தனது வறுமை நிலை குறித்து பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான rockstar என்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று  இசை மழையால் பலரையும் ஆனந்தக் கண்ணீரில் நனைய வைத்தார் பெருமாள்.

குடும்பத்தினருடன் பெருமாள்

-விளம்பரம்-

ஆனால், இவரது சொந்த வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து கூறியுள்ள அவர், ஒரே பையன் ஸ்கூல் படிக்கிறான். அம்மாவும் வயசானவங்க. என்னோட வருமானத்தை நம்பிதான் மொத்தக் குடும்பமும் இருக்கு. வெளியுலகத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு அதிக ஆசை இருந்தும், இதுவரை அதுக்கான வாய்ப்புகள் அமையல. இசை, ஸ்கூல், வீடுதான் என் உலகம். பகுதி நேர ஆசிரியரா இருக்கிறதால, ஸ்கூல் இயங்காத இந்தக் காலகட்டத்துல எனக்கு வருமானம் கிடைக்காது.`ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பெரிய ஹிட்டாச்சு. அதனால, அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வரும்னு ரொம்பவே ஆவலோடு இருந்தேன்.

குடும்பத்தினருடன் பெருமாள்

ஆனா, 17 வருஷங்கள் ஆகியும் இப்போ வரை எந்தப் பட வாய்ப்பும் வரல. வாழ்க்கை முழுக்கவே ஏமாற்றத்துலயே போயிட்டிருக்கு. அதனாலயே ஆசைகள், எதிர்பார்ப்புகளையே வெச்சுக்கிறதில்ல. கச்சேரி வாய்ப்புகளும் இல்லாததால, வறுமையின் பிடியில மொத்தக் குடும்பமுமா சிக்கித் தவிக்கிறோம். தன்மானத்துடன் வாழ முடியாததால, தவறான எண்ணங்களெல்லாம் வந்து போகுது. சரியான தூக்கம், நிம்மதியில்லாம தடுமாற்றத்துடன் இருக்கேன். இப்படி மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் புல்லாங்குழலை எடுத்து கொஞ்ச நேரம் வாசிச்சு என்னைச் சாந்தப்படுத்திக்கிறேன். எங்க குடும்பக் கஷ்டத்துக்கு யாராச்சும் உதவி செஞ்சா பயனுள்ளதா இருக்கும்

Advertisement