அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : அமைச்சர் மைக்கில் அழைத்தும் பரிசு பெற மறுத்த வீர சிறுமி, ஏன் பாருங்க.

0
1297
- Advertisement -

-விளம்பரம்-

இந்தியா முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் தமிழ் நாட்டு கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்து வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -
மைக்கில் அழைத்த அமைச்சர் மூர்த்தி

சில ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது தமிழகமே திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று போராட்டம் செய்திருந்தது. பின் பல கலவரத்திற்கு பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று உத்தரவிட்ட பிறகு கொரோனா தடைகளைத் தாண்டியும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. மேலும், நேற்று பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. நேற்று காலை 7.30மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் முன்னிலையில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறை:

தமிழக அரசின் கட்டுப்பாடுகளின் படி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே இந்த விழாவில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாநகராட்சி தலைமை மருத்துவர் ராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து விளையாட அனுமதித்தனர். இதேபோல காளைகளை கால்நடைத்துறை இணை இயக்குனர் நட்ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுப்பினார்.

-விளம்பரம்-
யோக தர்ஷினி - காளையுடன்

ஜல்லிக்கட்டு போட்டி குறித்த தகவல்:

ஜல்லிக்கட்டு போட்டியில் 7 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிடிபடாத காளைகளுக்கு தங்க காசு, கட்டில், பீரோ, சைக்கிள், ஏர்கூலர், ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 80 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வாங்காமல் சென்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டில் கலந்த விரதமிழச்சி யோகதர்ஷினி:

மதுரை ஐராவதநல்லூர் சேர்ந்தவர் யோகதர்ஷினி. யோகதர்ஷினி பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இந்த இளம் பெண்ணின் தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பராமரிக்கும் போது யோகதர்ஷினிக்கு ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார் யோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடிமாடாக போனது. அப்போது அப்போது விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு பரிசு வழங்க அழைத்தனர். ஆனால், இதனை வாங்க மறுத்து யோகயோகதர்ஷினி.அங்கிருந்து நடையை கட்டினார்.

பயிற்சி முடிந்து வருகையில்

பரிசு வாங்க மறுத்த யோகதர்ஷினி:

தொடர்ந்து விழாவில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவரை பரிசு வாங்கிச் செல்லும்படி மைக்கில் கூறினார். ஆனாலும், பரிசினை வாங்காமல் யோகதர்ஷினி சென்று விட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது. கடந்த ஆண்டும் இதே போன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையை களமிறங்கிய போது விழாக்குழுவினர் பரிசு வழங்க அழைத்த போது அதனைப் பெற மறுத்து காளையோடு யோகதர்ஷினி நடையை கட்டினார்.

யோகதர்ஷினி பரிசு வாங்க மறுத்த காரணம்:

அப்போது வருவாய் துறை அமைச்சராக இருந்த ஆர் பி உதயகுமார் மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வாங்குவதற்காக அழைத்த போதும் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இவர் ஏன் இப்படி செய்கிறார்? என்று பலரும் கேட்டு கருத்து தெரிவித்தார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் இப்படி செய்வதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், தன்னுடைய மாடு தொடர்ந்து பிடிமாடாகி வருவதால் தனக்குப் பரிசு வேண்டாம் என்று தான் அந்தப் இளம்பெண் ஒதுங்கி போவதாக கூறப்படுகிறது.

Advertisement