சமீபத்தில் ஜி5 ஒடிடியில் வெளியான அயலி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த காலத்து பெண்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தத்ரூபமாக காட்டிய இந்த தொடர் பெரிய அளவில் ஹிட் அடித்தது. மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்த தொடரின் இயக்குனருக்கு பெரியார் சிலை கொடுத்து பாராட்டியிருந்தார். இந்த தொடரில் நடித்த நடிகர்கள் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர். அந்த வகையில் தமிழ் செல்வியின் அம்மாவாக நடித்த மலையாள நடிகை அனுமோல் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அயலி படத்தில் தமிழ் செல்விக்கு அம்மாமாவாக குருவம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுமோல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அந்த பேட்டியில் “நான் தமிழ் சினிமாவிற்கு ஏழு வருடங்களுக்கு பிறகு வருகிறேன். இத்தனை வருடங்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றிருந்த வருத்தத்தை எல்லாம் அயலி போக்கிவிட்டது. என்னை அனைவரும் கிராமத்து பெண்ணாகவே மாறிவிட்டதாக கூறினார்கள். இவற்றை பார்க்கும் போது மகிச்சியாக இருக்கிறது. இந்த சிரியலில் இயக்கிய முத்துக்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அவர்களுக்கு நன்றி எனக் கூறினார் அனுமோல்.
கதையை கேட்டு மிரண்டுவிட்டேன் :
பின்னர் இந்த கதை எப்படி தனக்கு கிடைத்தது என்பதை பற்றி கூறிய அவர் “அயலி கதையை இயக்குனர் முத்துக்குமார் என்னிடம் சொல்லும் போது யாரோ ஒரு இயக்குனர் சொல்வதற்கத்தான் பார்த்தேன். ஆனால் அவர் கதையை கூறிய பிறகு என்னுடைய உடல் நடுங்கிவிட்டது. ஏனெற்றால் கொரோன சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்கள் குறித்து என்னுடைய நண்பரிடம் சொல்லி படமாக எடுக்கலாம் என்றிருந்த போதுதான் இந்த கதையை இயக்குனர் முத்துக்குமார் சொன்னார். இந்த கதையை கேட்டதும் அதிர்ந்துவிட்டேன்.
ஏழாவது படிக்கும் போது நடந்தது :
நான் நான்காவது படிக்கும் போதே அப்பா இறந்து விட்டார். இதனால் பலர் என்னுடைய அம்மாவிடம் வந்து ஆம்பள இல்லாத வீடு சீக்கிரமா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுன்னு சொன்னங்கள். நான் ஏழாவது படுக்கும் போது என்ன பொண்ணு பக்க வந்தாங்க அத இப்ப நினைத்தால் கூட பயமா இருக்கு. இப்போது கூட என்னுடைய ஊரில் பலர் அணிஅணியாக வந்து பள்ளிப்படிக்கும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் பெண் பார்த்து சொல்வார்கள். இதற்கெல்லாம் எதிராக ஒரு கதையா எழுத தோன்றியது அதனால் தான் இந்த படத்தில் நடிக்க விரும்பினேன்.
இத்தனை ஆண்டுகள் தமிழில் நடிக்காததற்கு காரணம் :
எனக்கு தமிழ் சரியாக பேச வராது, ஆனால் டப்பிங்கில் நானே பேசவேண்டும் என்று விரும்பினேன், அயலி படத்தில் மலையாளம் கலந்த தமிழில் பேசியதற்கு இன்றும் பாராட்டுகள் கிடைக்கிறது என்று கூறினார். மேலும் பேசிய அனுமோல் “தமிழ் சினிமாவில் இதனை வருடமாக நடிக்காததற்கு காரணம் சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. “ஒருநாள் இரவில்” என்ற சத்யராஜ் படத்தில் நான் பாலியல் தொழில் செய்யும் கதாபாத்திரமான வருவேன், அதற்கு பின்னர் கிடைத்த படங்களும் அப்படியே கிடைத்தால் தான் பல படங்களை தவிர்த்துவிட்டேன்.
அடுத்து நடிக்கும் படம் :
ஆனால் நான் அயலி படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன் படத்திற்காக கொஞ்சம் எடை போடவேண்டும் என்று கூறினார்கள். நான் எடை போட்டால் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்காது என்று பயப்டாமல் எடையை கூட்டினேன். ஏனென்றால் எனக்கு குருவம்மா கதாபாத்திரம் அவ்வளவு பிடித்திருந்தது. அதே போன்று எங்கள் வீட்டில் அனைவரும் பருமனானவர்கள் என்பதினால் எடை போடுவது சுலபமாக இருந்தது. தற்போது எடையை குறைக்க முயற்சி செந்துகொண்டிருக்கிறேன். மேலும் தமிழில் அடுத்தாக ஐஸ்வர்யா ராஜேஷ்டன் ஃபர்ஹானாவில் நடிப்பதாக கூறினார் நடிகை அனுமோல்.