உலக அழகி என்றதுமே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது நடிகை “ஐஸ்வர்யா ராய்” மட்டும் தான். 1997 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயங்கி “இருவர்” படத்தில் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக நிலைத்து வருகிறார்.
1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய். இதுவரை தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளார் . கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு பதுமையாக வலம்வந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த அச்சு அசலாக ஐஸ்வர்யா போன்று இருக்கும் ஒரு மாடல் அழகியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அவர் யார் என்று ஆராய்ந்த போது அவரது பெயர் மஹல்பரி ஜபரி, இவர் ஒரு ஐராணி மாடல் ஆவர். தற்போது இவரை ஐஸ்வர்யா ராயுடன் ஒப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.