ஸ்லீவ் லெஸ் உடைகளில் போஸ் கொடுத்து அசத்திய. ஆயுத எழுத்து சீரியல் நடிகை.

0
43182
sreethu-krishnan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பிரபலமான சீரியல்க்ளில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் சீரியலாக விளங்கி வருகிறது ஆயுத எழுத்து சீரியல். இந்த சீரியலில் கலெக்டர் என்ற இந்திரா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன். கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘7சி’ என்ற சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீத்து. அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த சீரியல் கிராமத்து பின்னணியில் உருவாகி வந்த கதையாகும். மேலும், இந்த சீரியலில் ஸ்ரீத்து அவர்கள் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்பட்தும்,நேர்மையான சப் கலெக்டராகவும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை ஈர்த்த ஸ்ரீத்து திடீரென்று ஸ்ரீத்து தற்போது இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்க்கையில் ஸ்ரீத்து வைத்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களை வெளியிட்டு வந்தார்கள். அதாவது விஜய் டிவியில் படிச்சு,விஜய் டிவிக்கே கலெக்டர் ஆயிட்டாங்க நம்ம ஸ்ரீத்து என்று பல மீமிஸ்கள் இணையங்களில் வந்தது. மேலும், ஆயுத எழுத்து சீரியல் குறித்து பல விவகாரம் சமூக வலைதளங்களில் போட்டு வந்தவர்கள்.

இதையும் பாருங்க : ஊர்வசியா? கண்ணகியா? இவரெல்லாம் ஏன் அழைத்தீர்கள். மீராவை கழுவி ஊற்றிய நடிகர்.

ஆயுத எழுத்து தொடரில் அவருடைய நடிப்பும் அழகும் , சீரியலில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்கள் ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என கூறி அட அந்த புள்ள’ தான் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். பின் சும்மா விடுவார்களா! சோசியல் மீடியாக்களில் மீம்ஸ் போட்டு இருந்தாங்க. இதுகுறித்து ஸ்ரீத்துவும் கூறியது, நானும் பார்த்தேன். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என கூறியிருந்தார். ஆனால், திடீரென்று ஸ்ரீத்து வெளியானது குறித்து ரசிகர்கள் மத்தியில் சோகம் நிலவியது.

-விளம்பரம்-

தற்போது ஆயுத எழுத்து சீரியலில் இவருக்கு பதிலாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான். இருப்பினும் ஸ்ரீத்து தான் இந்திரா கலெக்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார் என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். மேலும், ஸ்ரீத்துவை சீரியல் பக்கம் பார்க்கமுடியவில்லை என்றாலும் அம்மணி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். இந்த நநிலையில் நடிகை ஸ்ரீத்து மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது. ஆயுத எழுத்து சீரியலில் வாயில் புடவைகளில் ஹோம்லியாக இருந்த ஸ்ரீட் ஸ்ரீத்து நிஜத்தில் மாடர்ன் மங்கையாக இருந்து வருகிறார்.

Advertisement