சமீபத்தில் நடிகர் பாக்கியராஜ், கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பெண்கள் குறித்து பேசிய விஷயம் நடந்த சில தினங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பெண்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசியதால் பாக்யராஜ் மீது நீதி மன்றத்தில் வழக்கும் தொடரபட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சை நபரான நடிகை மீரா மிதுனும் கலந்து கொண்டு இருந்தார். நடிகை மீரா மிதுன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகை மீரா மிதுன் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து பிரபல நடிகர் அபி சரவணன் தனது முகநூல் பக்கத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஆர்.பி.எம். சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் தான் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை ராகுல் பரம ஹம்சா என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக எஸ். எஸ். ஆர். ஆரியன், கதாநாயகியாக உப்பசனா ஆர்.சி. நடித்து உள்ளார்கள். இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ‘கருத்துக்களை பதிவு செய்’. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் அபி சரவணனும் கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே குட்டி புலி, சாஹசம், பட்டதாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கடந்த சில காலமாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பறவை முனியம்மாவை நேரில் சந்தித்து அவருக்கு பல்வேறு உதவிகளை செய்திருந்து பலரின் பாராட்டையும் பெற்றிருந்தார் அபி சரவணன்.
இதையும் பாருங்க : மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன் அசைவ விரதமிருப்பதா சொன்னாரே. ஆனால், இது என்ன விக்கி.
இந்த நிலையில் நடிகர் அபி சரவணன், “கருத்துக்களை பதிவு செய்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகை மீரா மிதுன் நடந்து கொண்ட விதம் குறித்து விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், தமிழ் திரைத்துரையில் தனக்கென தனித்தடம் பதித்த சாதனையாளர்கள் மத்தியில், யார் இந்த மீரா மிதுன் உலக சமாதான தூதுவரா?தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ரம்பையா? ஊர்வசியா? கண்ணகியா? கொஞ்சம் கூட மேடை நாகரீகம் தெரியாத இந்தம்மாவ எல்லாம் எதுக்கு சார் சிறப்பு விருந்தினரா அழைக்கிறீர்கள். பாக்யராஜ் சார் இந்தியாவின் தலை சிறந்த கதையாசிரியர், நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் பத்திரிகைஆசிரியர். அதெல்லாம் விடுங்க, அவரு வயசு என்ன, அவரு தகுதி என்ன.
இந்தம்மா மீராமிதுன்லாம அவரு வயது அனுபவத்துக்கு முன் தூசிக்கு சமம். என்னா ஒரு அகம்பாவத்துல கால் மேல கால் போட்டு உட்காந்திருக்காங்க. மேடையில் எழுத்தாளர் சங்க தலைவர் #பாக்யராஜ் சார் இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா சார் கூட ஏதோ ஒரு விசயம் பேசிட்டுக்காரு. ரெண்டு பேருக்கு நடுவில் உட்காந்திருந்த இந்தம்மா மீரா மிதுன்க்கு காலை கீழ போடத்தெரியாதா? மேடை ஏறுனதுல இருந்து கால்மேல காலை போட்டு உட்கார்ந்து இருக்குறது மீரா மிதுன் அவங்க மேனரிசமா இருக்கலாம். ஆனா வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் புகழிலிலும் தன்னை விட பலமடங்கு உயர்ந்த ஜாம்பவான் தன் தலை குனிந்து பேசும்பாது… இத்தனை அகம்பாவமாக கால் மேல் கால் போட்டு இருக்கும் மீரா மிதுனை வன்மையாக கண்டிக்கும் முன். நடிகைன்னா அவங்களும் சாதாரண பெண்கள் தான்… அவர்களது தொழில் நடிப்பது அவ்வளவு தான்.
வேறு மாநில பெண்கள் தமிழ்நாட்டுக்கு நடிக்க வந்தால் அவர்களுக்கு தமிழ் பெண் போல சேலைகட்டி பூ வைத்து கொலுசு போட்டு வளையல் மாட்டி மூக்குத்தி போட்டு திரையில் அழகு பார்க்கும் நமது தமிழ் பட இயக்குனர்கள்.. தங்கள் கதாநாயகியாக இறக்குமதி செய்யும் வேறு மாநில பெண்களுக்கு தங்கள் கதையில் கதாபாத்தரத்தை சொல்லி சம்பளமும் தருவதோடு சேர்த்து நமது தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சாரமான வயதில் பெரியவர்களை மதிப்பதை பற்றியும் சொல்லி கொடுத்தால் இந்த மாதிரியான சில்லறைகள் இனிமேல் ஆடாது என்று குறிப்பிட்டுள்ளார்.