தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் ரேச்சல் ரெபெக்கா. இவர் நடிகை மட்டும் இல்லாமல் தன்னம்பிக்கை பேச்சாளர், ஆயுர்வேத மருத்துவர் என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். இவர் வேலூரை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதிலிருந்தே ஆயுர்வேதத்தில் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு காரணம் அவருடைய அம்மா கடைப்பிடித்த ஆரோக்கியமான மருத்துவ பழக்கம்தான்.

இதனால் இவர் சென்னையில் இளநிலை ஆயுர்வேதம் படித்தார். பின்னர் பெங்களூரில் முதுகலை படித்தார். தற்போது ரேச்சல் ரெபெக்கா ஆயுர்வேதம் மருத்துவராக இருக்கிறார். இப்படி இவர் ஆயுர்வேத மருத்துவராக இருந்தாலும் நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படை வெல்லும் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் ரேச்சல் ரெபெக்கா நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மீடியாவுக்குள் நுழைந்தார்.

Advertisement

கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கடைசி விவசாயி. நீண்ட நாட்கள் எதிர்பார்த்திருந்த கடைசி விவசாயி படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிகண்டன் இயக்கி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தில் மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசியாக ரேச்சல் நடித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தன்று நடிகை ரேச்சல் ரெபேக்கா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், கடைசி விவசாயி படத்தில் மங்கையர்கரசியாக நான் நடித்தேன் என்பதை விட இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறேன் என்று சொல்லலாம். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு உசிலம்பட்டியில் நடந்தது. அந்த ஊர் மக்கள் என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்தார்கள். இந்த படத்தில் நடித்த தாத்தா என்னை சொந்த பேத்தியாக பார்த்தார். மேலும், இந்த படத்தின் மூலம் நிறைய பேருடைய பாராட்டுக்கள் கிடைத்தது.

Advertisement

ரேச்சலை பாராட்டும் பிரபலங்கள்:

Advertisement

இந்த படத்தை பார்த்து விஜய் சேதுபதி, இயக்குனர்கள் சீனு ராமசாமி, மிஸ்கின் சார் போன்ற பலருமே என்னை பாராட்டிருந்தார்கள். அவருடைய அடுத்த படத்திலும் வாய்ப்பு கேட்டு இருக்கேன். நிச்சயம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இனி எந்த திரைப்படமாக இருந்தாலும் நல்ல நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்.

அதே போல் நடிகையாகி விட்டதால் மருத்துவ பணிக்கு முழுக்கு போட மாட்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படி இளம் வயதிலேயே பன்முகங்கள் கொண்ட ரேச்சலுக்கு 2015 ஆம் ஆண்டு பெண் சாதையாளர் விருதும் 2016 புதுமை பெண் விருதும் கிடைத்து இருக்கிறது. தற்போது இளம் தலைமுறைகளுக்கு ஊக்கம் தரும் பேச்சாளராகவும், மக்களை கவர்ந்த நடிகையாகவும் திகழ்ந்து வரும் ரேச்சல் சமீபத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Advertisement