விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இப்படித்தான் இருக்கணும் என்று நிறைய கண்டிஷன் எல்லாம் போட்டார். அது மட்டும் இல்லாமல் நடேசன் குடித்து வந்து ஆட்டம் போட்டிருந்தார். நிலா, இனிமேல் நீங்க குடிக்க கூடாது. உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு மருமகள் போலவே நடந்து கொண்டார். இதை பார்த்து சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் எல்லோருக்கும் நிலா பிரித்துக் கொடுத்தார். எல்லோரும் பரபரப்பாக தங்களுடைய வேலைகள் எல்லாம் செய்தார்கள்.

நிலா, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சோழனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்தார்கள். பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து வானதியின் அப்பா, வானதி மெடிக்கல் ஷாப் வைத்து தர சொல்லி கட்டாயப்படுத்தும் விஷயத்தை எல்லாம் சொல்லி புலம்பினார். பாண்டியனும் நான் பேசிக்கொள்கிறேன் என்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் வானதி கடைக்கு வந்தார்.
அய்யனார் துணை:
அப்போது நியூஸ் பேப்பரில் மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு கடை வாடைக்கு கிடைக்கும் விஷயத்தைப் பற்றி வானதி இடம் பாண்டியன் சொன்னார். பின் இருவருமே சேர்ந்து அந்த கடையை பார்க்க கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் நிலா-சோழன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த மனோகர், இருவருக்குமே வீட்டில் சிம்பிளாக ரிசப்ஷன் வைக்க இருக்கிறேன். மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு வந்து விடு என்றார். நிலா, அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். பின் சோழனும் முதலில் ரிசப்ஷன் வேண்டாம் என்றார். இருந்தாலும் நிலாவின் அப்பா கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொண்டார். ஆனால், இதில் நிலாவிற்கு விருப்பமே இல்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன்,வானதி இருவரும் மெடிக்கல் ஷாப்க்கு சென்று விடுகிறார்கள். அங்கு கடை வாடகைக்கு விடுவதை பற்றி விசாரிக்கிறார்கள். கடையின் ஓனரும், அட்வான்ஸ் ஒரு லட்சம் வாடகை 20,000 என்று சொல்கிறார். பின் வானதி- பாண்டியன் இருவரும் கெஞ்சி கேட்டதால் வாடகையை பத்தாயிரம் என்று குறைத்துக் கொள்கிறார். பின் வானதி- பாண்டியன் இருவரும் மெடிக்கல் ஷாப்பை பற்றிய அக்கம் பக்கத்தில் விசாரிக்கிறார்கள். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த வானதி, மெடிக்கல் ஷாப் பார்த்த விஷயத்தை தன்னுடைய அப்பாவிடம் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே முடியாது என்று சொல்கிறார்கள். வானதி, நீங்கள் எனக்காக இந்த உதவி செய்தாக வேண்டும். பாண்டியன் எனக்காக ரொம்ப கஷ்டப்படுகிறான். நீங்கள் இது செய்து தான் ஆக வேண்டும் என்று ஆர்டர் போட்டு விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் நிலா- சோழன் இருவரும் மனோகர் ரிசப்ஷன் ஏற்பாடு செய்ய இருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார்கள். வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், நிலா அதில் விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறார். நடேசன், சேரன் எல்லோருமே சொல்வதால் நிலா ரிசப்ஷனுக்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள்






