வெள்ளையாக கிரீம் போட சொன்ன கடை – வெளுத்து வாங்கிய அழகி பட நடிகை.

0
412
Nanditha
- Advertisement -

கருப்பு- வெள்ளை நிற பாகுபாட்டை குறித்து அழகி பட நடிகை நந்திதா தாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நந்திதாதாஸ். இவர் 1969 ஆம் ஆண்டு மும்பை மாநிலம், மஹாராஷ்டிராவில் பிறந்தவர். படித்தது எல்லாம் டெல்லியில் தான். இவர் நடிகை மட்டும் இல்லாமல் திரைப்பட இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

இவர் 1989 ஆம் ஆண்டுகளில் “பரநத்தி ” என்ற இந்தி படத்தின் மூலம் திரை துறையில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அதன் பின் முதன்முதலாக இயக்கிய ஃபிராக் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஏற்படுத்தி தந்தது. இந்த படம் மூலம் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதோடு இவர் முதன்முதலாக நாடக குழுவில் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு இந்தியில் பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

நந்திதா தாஸ் திரைப்பயணம்:

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவர் தமிழில் வெளிவந்த அழகி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது.

நந்திதா தாஸ் குடும்பம்:

இப்படி நந்திதா கலைத்துறையில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு தனது கலை பங்களிப்பிற்காக வாஷிங்டனில் நடந்த சர்வதேச மகளிர் மன்ற நிகழ்ச்சியில் முதல் இந்திய பெண்ணாக கௌரவிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2002 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகாலக் காதலரான சௌம்யா சென் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் 2007 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார். அதன் பின்னர் தொழிலதிபரான சுப்தோஷ் மஸ்காராவை திருமணமாக செய்து கொண்டார்.

-விளம்பரம்-

நந்திதா தாஸ் அளித்த பேட்டி:

திருமணத்திற்கு பின்னும் இவர் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். பின் சில ஆண்டுகளாக இவர் நடிக்கவில்லை. முடிந்தது. இந்நிலையில் கருப்பு வெள்ளை நிற பாகுபாட்டை குறித்து நடிகை நந்திதா தாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாகவே இவர் நிற பாகுபாடுகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் கருப்பு அழகானது தான் என்றும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நந்திதாஸ் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நிற பாகுபாடு குறித்து சொன்னது, கல்லூரியில் பல பேர் என்னிடம் கருப்பாக இருந்து கொண்டு எப்படி தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

நிறப்பாகுபாடு குறித்து சொன்னது:

நான் எப்போதும் அந்த கோணத்தில் யோசித்தது இல்லை. அதனால் அவர்கள் கேட்ட கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் பெற்றோர் நிறத்தை பற்றி என் தலையில் ஏற்றி என்னை வளர்க்கவில்லை. இருந்தாலும், நான் அழகு சாதன கடைகளுக்கு செல்லும்போது ஆன்டி- டேன் கிரீம்களை என்னிடம் காண்பித்து இதை போட்டால் நீங்கள் சிவப்பாக ஆக முடியும் என்றெல்லாம் சொல்வார்கள். இதனால் நான் அவர்களிடம், இந்த உடம்பிலே பிறந்தேன். இந்த உடம்பிலே இறப்பின். எனக்கு எந்த கிரீமும் வேண்டாம் என்று சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement