அழகி பட நடிகர் சின்ன பார்த்திபனா இது – என்ன படு ஸ்டைலிஷ்ஷா இருக்கார் பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ .

0
13876
sathish
- Advertisement -

அழகி படத்தில் நடித்த இளம் பார்த்திபன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரின் நிலை என்ன என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்… இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப் படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப் படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இந்த படம் பெற்றது.

-விளம்பரம்-

அழகி படத்தில் சிறு வயது நந்திதா தாஸுக்கு காதலனாக சிறு வயது பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சதீஷ்.இவர் சேரன் இயக்கத்தில் நடிப்பில் வெளி வந்த ‘சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் சேரனின் தம்பியாக நடித்து இருந்தார். அப்போது பூனை மீசையுடன் இருந்தவர். இப்போது அரும்பு மீசை வைத்து இளைஞராக இருக்கிறார். இந்த அழகி படத்தில் நடிக்கும் போது நடிகர் சதீஸ் பன்னிரண்டாம் வகுப்பு தான் பதித்து கொண்டு இருந்தாராம்.

- Advertisement -

மேலும், அந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் சதீஸ் நடித்து இருந்தார். நடிகர் சதீஸ் அவர்கள் புதுமுக இயக்குநர் எஸ்.கே. மதி என்ற இயக்குனரின் இயக்கத்தில் “கூட்டாளி” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். ஆனால், திடீரென்று என்ன காரணம் என்று தெரியவில்லை படம் நின்று விட்டது என்று கூறப்படுகிறது.

அதோடு ஒரு பக்கம் இந்த கூட்டாளி படம் ரிலீசாகி வெற்றி அடையவில்லை என்றும் கூறி வருகிறார்கள். ஒரு பேட்டி ஒன்றில் பேசிய சதிஷ், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறி இருந்தார். தற்போது இருக்கும் அழகி நடிகர் சதீஸ் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் அடையாளம் தெரியாத அளவு படு ஸ்டைலிஷ்ஷாக இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement