அழகிய தமிழ் மகன் படத்துல வந்த குட்டி பொண்ணா இது -ப்பா, இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

0
1024
niveditha

கெத்து காட்டும் ஹீரோக்கள், க்யூட் ரியாக்‌ஷன்களால் மனசை அள்ளும் ஹீரோயின்களைத் தாண்டி சில ஃப்ரேம்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் குட்டி நட்சத்திரங்கள். பெருசுகளையே கலாய்க்கும் கவுன்ட்டர் டயலாக்காக இருந்தாலும் சரி, பார்க்கும் எல்லாரையும் கண் வியர்க்க வைக்கும் சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தாலும் சரி, அடடே இந்தச் சுட்டி செமையா நடிக்குதே!’ என நம்மை ஓ போட வைத்த பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் இருக்கின்றனர். பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை பல்வேறு குழந்தை நட்சத்திரங்களை தமிழ் சினிமா பார்த்திருக்கிறது.

nivethitha-cinemapettai

அந்த வகையில் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த இந்த அழகிய மகளையும் மறக்க முடியாது. இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகிய தமிழ் மகன். இந்த படத்தின் மூலம் தான் விஜய் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய்யின் பக்கத்துக்கு வீட்டு குழந்தையாக ரேணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பேபி நிவேதிதா.

- Advertisement -

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் துபாயில் தான் இவரது அக்கா நிரஞ்சனா விஜயனும் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி நிவேதிதா மலையாளத்தில் 2009ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிரா மரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே கேரள மாநில விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக கௌரவிக்கப்பட்டார்.

இதுவரை இவர் 10 முறை சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான விருதை பெற்றுள்ளார். கேரள சினிமாவில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஆறு விருதுகளை பெற்றார் அதன் பின்னர் அவர் ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ஆனால் இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ அழகிய தமிழ் மகன் பலத்தின் மூலம்தான் இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த பலரும் அந்தக் குழந்தையா இது என்று வியப்படைந்த இருக்கிறார்கள்

-விளம்பரம்-
Advertisement