விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராதிகா கால் தடுமாறி கீழே விழுந்ததால் அவரின் கர்ப்பம் கலைந்து இருந்தது. ஆனால், ராதிகா அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுத்து இருந்தது மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்து இருந்தது. பின் மயூ சொன்ன சாட்சியை ஏற்று நீதிமன்றம் ஈஸ்வரி வழக்கை தள்ளுபடி செய்து வெளியே வந்தார். அதன் பின் கோபி, தன்னுடைய அம்மாவிடம் அழுது மன்னிப்பு கேட்க, கோபத்தில் ஈஸ்வரி, இனி எனக்கு மகனே இல்லை என்று தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டார்.
கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் சென்னையில் சமையல் போட்டி நடந்தது. அதில் பாக்கியா- கோபி இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். பின் பார்ட்டியில் நடந்த சண்டையில் போலீஸ் வந்து அனைவரையும் கைது செய்து இருந்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி பாக்கியாவை வர வைத்து நடந்ததை சொன்னார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
இதனால் பாக்கியா உடைந்து விட்டார். கடைசியில் சமையல் போட்டியில் கோபி நன்றாக சமைத்து வெற்றியும் பெற்றார். மேலும், வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். இந்த உண்மை கோபிக்கு தெரியவந்து வழக்கம் போல் பாக்கியாவை திட்டி சண்டை போட்டு இருந்தார். அதோடு கோபி, இனியாவை அழைத்து செல்ல பார்த்தார். ஆனால், ஈஸ்வரி தடுத்து நிறுத்தி இருந்தார். இந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்ததால் இனியா பயந்து கோபியிடம் சொல்லி இருந்தார்.
சீரியல் கதை:
இருந்தாலும், பாக்கியாவிற்கு உண்மை தெரிந்து கல்லூரிக்கு போனார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்டார். அப்போது பிரின்சிபால், இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்க, உண்மை தானே சொன்னோம் என்கிறார்.
இந்த வாரம் எபிசோட்:
இது எல்லாம் கேட்டு கோபி, என் மகளுக்கும் எனக்குமான உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார். கோபி நடந்ததை நினைத்து ராதிகாவிடம் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். ஆனால், வழக்கம்போல் ராதிகா, கோபியை திட்டி சண்டை போட்டு இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுகிறார். கடைசியில் அவர், ஏதோ ஒரு முடிவு எடுத்து கடிதம் எழுதுகிறார். அது பாக்கியாவிற்கு தெரியவில்லை.
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, உன்னை திருமணம் செய்து கொண்டதால் தான் நான் என் குடும்பத்தை இழந்தேன். உன்னால் தான் என்னுடைய வாழ்க்கை இந்த நிலைமைக்கு மாறி இருக்கிறது என்று கோபப்பட்டு பேசுகிறார். உடனே ராதிகா, என்னை விவாகரத்து செய்து விட்டு உங்க குடும்பத்தோடு போக வேண்டியது தானே? என்று கத்துகிறார். தன்னுடைய குடும்பம் சந்தோசமாக இருப்பதை பார்த்து கோபி ஏங்குகிறார். வீட்டில் கோபி சோகப்பாடல் கேட்டு பாடி கொண்டிருக்கிறார். இனிவரும் நாட்களில் ராதிகா-கோபி விவாகரத்து செய்து கொள்வார்களா? மீண்டும் கோபி தன்னுடைய வீட்டிற்கே வருவாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.