தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர். பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான்.
நடிகை ஜெனிபர் ஆரம்பத்தில் ஒரு குரூப் டான்சராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஷாம் நடிப்பில் வெளியான ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க ‘ படத்தில் இடம்பெற்ற யாமினி என்ற பாடலிலும் வந்து இருப்பார். ஆனால், சினிமாவில் சரியாக வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பினார். பாக்கியலட்சுமி தொடரில் இவர் நடித்து வரும் ராதிகா கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ஜெனிபர் விலகி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘அம்மன்’ தொடரில் நடிக்க இருக்கிறார் ஜெனிபர். அம்மன் தொடர் ஏற்கனவே ஒளிபரப்பான நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது விரைவில் இந்த தொடரின் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் நடித்த ஜெனிபர் மீண்டும் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்.