ரஜினி பட வரிசையில் நாம் மார்க்க முடியாத படங்களில் ஒன்று என்றால் அது “பாட்ஷா” தான். இயக்குனர் சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரஜினிக்கு ஒரு மைல் கல் என்றே சொல்லலாம். இந்த படத்தில் நடித்த அவரது தம்பி உங்களுக்கு நினைவிருக்கிறதா.

Advertisement

இந்த படத்தில் ரஜினியின் தம்பி ஒரு போலீஸ் கறாராக இருப்பார்.மேலும் அவர் பேசிய “சொல்லுங்க நீங்க யாரு, பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க சொல்லுங்க ” என்ற வசனம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் தம்பியாக நடித்தவரின் பெயர் ஷாஷி குமார். கர்நாடகாவை சேர்ந்த இவர் 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதன் முதலில் கன்னட மொழியில், நடிகர் ராகவேந்திரா ராஜ்குமார் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான “சிரஞ்சீவி சுதாகரா” என்ற படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த யுத்த காண்டம் என்னும் படம் சூப்பர் ஹிட்டானது.

Advertisement

Advertisement

அதன் பின்னர் தமிழ், கன்னடம்,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார். தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து அரசியலில் ஈடுபட்ட இவர் கர்னாடகாவில் தேர்தலில் நின்று எம். பி யாகவும் பொறுப்பேற்றார். சினிமா அரசியல் என்று பிசியாக இருந்த இவர் குடித்து விட்டு வாகனம் ஒட்டியதில் ஒரு மிகப்பெரிய விபத்தை சந்தித்து, நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தார்.

அதன் பின்னர் உடல் நிலை தேறி மீண்டும் படங்களில் நடிக்க துவங்கினார். இவர் சினிமாவில் இறுதியாக முகம் காண்பித்த படம் கன்னடத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான “சிவயோகி ஸ்ரீ புட்டயஜ்ஜா” என்ற படத்தில் தான். தற்போது தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளளைகளுடன் காலத்தை கழித்து வருகிறார்.

Advertisement