கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணிற்கு Hiv தோற்று இருக்கும் ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த இளம் கர்ப்பிணியை அவரது கணவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு போதுமான ரத்தம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, சிவகாசியில் உள்ள அரசு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் பெறப்பட்டு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.

இந்நிலையில் ஹெச்.ஐ.வி.பாதிப்புள்ளவர் கொடுத்த ரத்தம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த அப்பாவி தம்பதிகள், மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி. நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Advertisement

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு நேற்று (ஜனவரி 17)பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை 1.75 கிலோ மட்டும் இருப்பதாகவும் மற்றபடி குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை குறைவான எடையில் இருப்பதால் தற்போது ICU வில் கண்காணிப்பில் இருந்து வருகிறது. மேலும், அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு எச் ஐ வி தோற்று இருக்கிறதா இல்லையா என்று இன்னும் 45 நாட்கள் கழித்தே சோதனை மேற்கொள்ளபடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்னர்.

Advertisement
Advertisement