தன்னை குறித்த மத சர்ச்சைக்கு youtuber இர்ஃபான் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

Advertisement

இர்பான் குறித்த தகவல்:

இவரை யூடியூபில் மட்டும் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பல பேரும் இவரை பாலோ செய்கிறார்கள். youtube ஐ தாண்டி சமீப காலமாக இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்த இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி 5:

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

Advertisement

இர்பான் குறித்த சர்ச்சை:

மேலும், இந்த நிகழ்ச்சி இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இர்பானை கான ரசிகர்கள் பலருமே ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் இர்பான் குறித்த சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீப காலமாகவே இவரை மத வெறியன் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியா விமர்சித்து இருந்தார்கள். குறிப்பாக, அதில் இர்ப்பான் 99 சதவீதம் முஸ்லிம் கடைகளுக்கு மட்டுமே சென்ற ரிவியூ போட்டு வருமானத்தை பெருக்கி வருகிறார்.

Advertisement

இர்பான் கொடுத்த பதிலடி:

ஒரு சதவீதம் மட்டும் தான் இந்துக்கள் கடைகளுக்கு செல்கிறார் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார்கள். இதை பார்த்த இர்ப்பான், அது எப்படி டா? என் மதத்தை சேர்ந்தவர் கடை பேர் இருந்தா மட்டும் அங்கு வந்து நொட்டுறீங்க. பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி எல்லாத்தையும் மத வெறியா திணிக்கிற உன் கிட்ட தாண்டா இருக்கு செங்கல் சைக்கோ என்று கூறி இதற்கு முன் இவர் ரிவியூ செய்த இந்துக்களின் கடைகளின் பெயர்களையும் கூறி இருக்கிறார்.

Advertisement