பேச்சுலர் – முழு விமர்சனம் இதோ.

0
883
bachelor
- Advertisement -

இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் பேச்சுலர். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்யா பாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறார்கள். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பேச்சுலர் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் உருவாகியிருக்கும் படம் தான் பேச்சுலர். படத்தில் ஜிவி பிரகாஷ் பேச்சிலராக நடித்து இருக்கிறார். தன்னை சுற்றி எது நடந்தாலும் சரி, தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி கொஞ்சம் கூட கவலைப் படாத கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கிறார். மேலும், எவ்வளவு பெரிய விஷயம் ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

பிறகு ஜிவி பிரகாஷ் முதல் முறையாக கதாநாயகி சுப்புவை சந்திக்கிறார். அப்போது சந்திக்கும் பொழுது இருவருக்கும் திடீரென ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பின் ஹீரோ சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக செல்கிறார். அங்கு ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறார்கள். பின் ஜிவி பிரகாஷ் தன் நெருங்கிய நண்பன் உதவியுடன் கதாநாயகியுடன் ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார். ஒரே ஆபீசில் வேலை செய்வதாலும், தன் நண்பரின் சிபாரிசலும் கதாநாயகி ஜிவி பிரகாஷ் உடன் தங்க ஓகே சொல்கிறார்.

-விளம்பரம்-

இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின் இருவரும் எல்லை மிறுகிறார்கள். ஆனால், ஜிவி பிரகாஷ் மட்டும் இதனை காதல் என்று ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே அவர்களுடைய பிரிவுக்கு காரணமாக அமைகிறது. மேலும், இவர்களின் பிரிவுக்கு பின் இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளையும், அதில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களையும் வைத்து கதை நகர்கிறது. இதையெல்லாம் எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள்? அதில் இருந்து இவர்கள் வெளியே வந்தாரா? கடைசியில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

வழக்கம் போல் இல்லாமல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கிறார். அறிமுக கதாநாயகி திவ்யா பாரதியும் முதல் படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் எல்லா நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் தன் நண்பர்களுடன் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. அறிமுக இயக்குனராக இருக்கும் சக்தி செல்வகுமார் தேர்ந்தெடுத்த கதைகளும் வரவேற்கப்படுகிறது.

கதைக்கு ஏற்றார்போல் கதாபாத்திரங்களையும் அருமையாக தேர்ந்தெடுத்து இருப்பது படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. மேலும், படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் கூடுதல் பக்கபலமாக இருக்கிறது. இருந்தும் கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் கவனித்த இயக்குனர் சதீஷ் கதைகளத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அடல்ட் படமாக இருந்தாலும் பார்ப்போரின் முகம் சுளிக்காத வகையில் கதையை கையாண்டிருக்கிறார்.

பிளஸ்:

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

செல்வகுமாரின் இயக்கம் நன்றாக இருக்கிறது.

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

அடல்ட் படமாக இருந்தாலும் பார்ப்போரின் முகத்தை சுளிக்காத வகையில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

மைனஸ்:

திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் கதை போரடிக்காமல் சென்றிருக்கும்.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்குப் பெரிய குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் பேச்சிலர் –இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளது.

Advertisement