தமிழ் சினிமாவில் மிகக் கடுமையாக உழைக்கக் கூடிய ஒரு மிகச்சிறந்த நடிகர் விக்ரம். வித்யாசமான கதைக்காக தன் உடலையும் வருத்தி எந்த நிலைக்கும் செல்பவர் விக்ரம்.
இவர் நடிக்கும் படங்கள் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை எனினும் அவரது ஆத்மா திருப்திக்காக நடித்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்பவர் இவர். இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் எதுவென்றால் சேது படம்தான். 1999ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை பாலா இயக்கி இருந்தார். இந்த படத்தில் மனநலம் குன்றியவராக நடித்திருப்பார்.
இந்த படத்தில் விக்ரமிற்கு பெரிய பேர் கிடைத்தது. அண்மையில் இந்த படத்தை பற்றி நடிகர் பாக்யராஜ் பேசி இருந்தார்.சேது படம் வெளியான பின்னர் தியேட்டரில் போய் அந்த படத்தைப் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. நான் படம் பார்க்கும்போது என் அருகில் இரு பெண் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் யாரென முதலில் தெரியவில்லை.
படம் முடிந்தவுடன் அந்த பெண் என்னிடம், படம் எப்படி இருக்கிறது எனக் கேட்டார். நான் அதற்கு உடனே நான் விக்ரமிற்கு இது முதல் படமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும், இல்லையெனில் வேறு ஒரு ஹீரோ நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறினேன்.
ஆனால், அவர் விக்ரமிற்கு இது தான் நல்ல சிறந்த படம் சார், எனக் கூறிவிட்டு கிளம்பிவிட்டார். பின்னர் தான் தெரிந்தது அவர் விக்ரமின் மனைவி என, எனக் கூறினார் பாக்யராஜ்.