சிகிச்சை கொடுத்த நர்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய பாலய்யா

0
445
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பிரபலமான பாலகிருஷ்ணா செவிலியர்கள் பற்றி கூறியது தற்போது சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார்.

-விளம்பரம்-

ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

தொடர் சர்ச்சையில் சிக்கும் பாலகிருஷ்ணா :

மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இவருடைய கருத்துக்கள் மற்றும் செய்திகளை மூலம் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார். செல்பி எடுக்க வரும் ரசிகர்களை தாக்குவது அவர்களின் செல்போனை தூக்கி எறிவது, குழந்தையை அடித்து போஸ் கொடுக்க சொல்வது, என சர்ச்சைகளில் மாட்டிய இவர் சாமீபத்தில் கூட தெலுங்கு பிரபல நடிகரான நாகேஸ்வர ராவ் பெயரை குறிப்பிட்டு கேலி செய்த்து என பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக்கொண்டே வருகிறார் பால கிருஷ்ணா.

செவிலியர் குறித்து பால கிருஷ்ணா கூறியது :

இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இவர் தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பபில் நிகழ்ச்சியில் விருந்தினராக ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கலந்து கொண்டிருந்தார். அப்போது பவுல் கல்யாணிடம் பேசுகையில் பாலகிருஷ்ணா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விபத்து பற்றி கூறியிருந்தார். அப்போது அழகான நர்ஸை பார்த்தும் அந்த நர்ஸ் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார் என்ற உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று கூறினார்.

-விளம்பரம்-

பொய்யான தகவல் :

இவர் இப்படி கூறியது வைரலாகவே செவிலியர்கள் பால கிருஷ்ணா தங்களை இழிவுபடுத்துமாறு பேசியதாக கண்டனத்தை தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் பாலகிருஷ்ணா தற்போது ஒரு பதிவை இட்டுள்ளார். அந்த பதிவில் “செவிலியர்களை நான் இழவு படுத்தியதாக சிலர் கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடைய வார்த்தைகள் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மன்னித்து விடுங்கள் :

நோய் வாய்ப்பட்டவர்களுக்கு சேவை செய்த என்னுடைய சகோதரிகள் மீது எப்போதுமே எனக்கு ஒரு தனி மரியாதை இருக்கிறது கொரோனா காலத்தில் இரவும் பகலமாக நோயாளிகளுக்கு தங்களுடைய உயிரை பணயம் வைத்து சேவை செய்த என்னுடைய சகோதரிகளை பாராட்ட வேண்டும். என்னுடைய வார்த்தைகள் உங்களின் மனதை காயப்படுத்தியிருந்தார் மன்னிக்கவும் என்று பதிவிட்டிருந்தார் பால கிருஷ்ணா.

Advertisement