தங்கள் குடும்பத்தை கேலி செய்த பாலய்யா – பதிலடி கொடுத்த ‘நாகர்ஜுனா அக்கினேனி’ குடும்பம்.

0
455
balayya
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார். ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.

- Advertisement -

வீர சிம்ஹா ரெட்டி படம் :

இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் கடந்த 13ஆம் தேதி  தெலுங்கு சினிமாவில் வெளியானது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.

வெற்றி விழாவில் கலாய்த்த பாலகிருஷ்ணா :

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு வில்லா சமீபத்தில் நடந்தது. அந்த வெற்றி விழாவில் பாலகிருஷ்ணா பேசும் போது “அக்னினேனி தொக்கினேனி ..அ அ ரங்காராவ், ஈ ஈ ரங்கராவ் என தெலுங்கில் பிரபல நடிகர்களான அக்னியோனி நாகேஸ்ராவ் பற்றியும், குணச்சித்திர நடிகர்களான எஸ் வி ரங்காராவ் பற்றியும் கேலி செய்யும் முறையில் பேசினார் நடிகர் பாலகிருஷ்ணா.

-விளம்பரம்-

பதிலடி கொடுத்த அக்கினேனி பேரன்கள் :

இது சர்ச்சையாக மாறியதால் இரண்டு நாட்களாக சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஏனென்றால் அக்கினேனி நாகேஸ்வர ராவ், என் டி ராமராவ் போன்றவர்கள் தெலுங்கி சினிமாவில் பல சாதனைகளை புரிந்தவர்கள். இவர்கள் காலத்தில் தான் தெலுங்கு சினிமா வளர்ந்தது. மேலும் இவர்களது வாரிசுகள் இப்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பாலகிருஷ்ணா அக்கினேனி, ரங்கராவ் இவர்களை கேலிசெய்த்தால் நாகேஸ்வராவின் பேரன்கள் ராகார்ஜுனா மற்றும் நாக சைதன்யா இருவரும் தனித்தனியாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில் ரங்கா ராவ் மற்றும் அக்கினேனி போன்றவர்கள் தெலுங்கு சினிமாவின் தூன்களாகவும், பெருமையாகவும் இருந்து பங்களித்தவர்கள். இவர்களை குறைவாக பேசுவது நம்மை நாமே தாழ்த்தி பேசுவதாக இருக்கும் என குய்ப்ட்டுள்ளன.

பிரச்னை முடிவு பெறுமா? :

தெலுங்கு சினிமாவில் நாகார்ஜுன் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் நட்பாக பழகி கொள்ளமாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தின் போது பாலகிருஷ்ணா பேச்சில் தடுமாற்றங்ககள் இருந்ததாகவும் நிகழ்ச்சியை கண்டவர்கள் கூறுகின்றனர். இதற்கு அக்கினேனி குடும்பம் பாலகிருஷ்ணாவிற்கு பதிலடி கொடுத்த நிலையில் இந்த பிரச்சனை இத்துடன் முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

Advertisement