பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்மா ரெட்டி திரைப்படம் நேற்று வெளியான நிலையில் படம் வெற்றியடைய அவரது ரசிகர்கள் செய்திருக்கும் செயல் தற்போது சர்ச்சையாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார்.
பாலகிருஷ்ணா :
ஆந்திராவில் நடிகர் இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அதுமட்டுமல்ல இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.இந்த நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் நேற்று வெளியானது.
#VeeraSimhaReddy – Entha abhimanam unna – adi express cheytaniki oka padathi untundi. Entha chaduvukuni, enni udyogalu cheskuna, em car nadipina – basic civil sense lekhapothey em labham. Cha! US lo kuda paruvu teeytam modulpettaru ga. Doola teerindi baaga 🔥 Kudos to Dallas cops pic.twitter.com/zBs23JriKU
— Biggy Baby (@biggiebaby5) January 12, 2023
வீர சிம்ஹா ரெட்டி படம் :
இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வாரிசு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். நேற்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இதே நாளில் சிரஞ்சீவி நடித்திருந்த “வால்டர் வீரய்யா” திரைப்படமும் ஒன்றாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் எந்த படம் வெற்றியடைய போக்கியது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பலி கொடுத்த ரசிகர்கள் :
மேலும் இரண்டு படங்களும் வெளியாவதற்கு முன்னரே போஸ்டர் ஓட்டுவது, பாலபிஷேகம் செய்வது, தோரணம் கட்டுவது என இருவரது ரசிகர்களும் செய்து வந்தனர். இந்த நிலையில் தான் திருப்பதியில் உள்ள ஒரு திரையரங்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடித்த “வீர சிம்ஹா ரெட்டி” படம் வெற்றி பெற வேண்டி திரையரங்கம் முன்பு ஆட்டுகிடாவை பலி கொடுத்தனர். மேலும் ஜெய் பாலையா ஜெய் பாலையா என பாலகிருஷ்ணா ரசிகர்களை கோஷங்களை எழுப்பினர்.
Appatlo train 🚂 ippudu car 🚗
— Raavan (@WKurrollu) January 12, 2023
..#VeeraSimhaReddy #VeeraSimhaReddyOnJan12th #Balakrishna pic.twitter.com/R1jmV8XGHM
கைது செய்த போலீசார் :
அதோடு கிழக்கு கோதாவரியில் உள்ள தனுகு திரையரங்கிலும் இதே போன்று ஆட்டுக்கிடா ஒன்றை ரசிகர்கள் பலி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆடுகளை பலிகொடுத்தவர்கள் மீது போலீஸில் புகாரளித்தனர். இதனால் ஆடுகளை பலி கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணா ரசிகர்கள் 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடித்தனர். இந்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது.