மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்று மேல்மருவத்தூர் அம்மன். தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் இந்த மேல்மருவத்தூர் அம்மன் புகழ் பெற்றிருக்கிறார். இதனால் வருடம் வருடம் இந்த கோயிலுக்கு மாலை அணிந்து பலரும் தங்களுடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் தலைவராக பங்காரு அடிகளார் இருக்கிறார். இவர் ஆன்மிகத்தில் புரட்சி செய்தவர். இவர் மேல்மருவத்தூரில் உள்ள கோயிலில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையை கொண்டு வந்தவர். இவரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது கூட வழங்கப்பட்டுள்ளது. இவர் மேல்மருவத்தூர் அம்மன் கோயில் மட்டும் இல்லாமல் கல்லூரி, பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

Advertisement

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் தேவா அவர்கள் பங்காரு அடிகளாரை புகழ்ந்து பாடியிருந்தது அனைவரும் அறிந்தது. பாமர மக்கள் கூட அம்மன் சன்னிதானத்தில் சென்று வழிப்பாடு நடத்தலாம் என்ற புரட்சியை செய்தவர். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் பூஜை செய்யலாம் என்றும், சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகத்திற்கு சொன்னவர். பங்காரு அடிகள்.

சபரிமலைக்கு எப்படி இருமுடி கட்டி வருகிறார்களோ அதே போல பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி பீடத்திற்கும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இவர் ஏராளமான சமூக சேவைகளையும் செய்து இருக்கிறார். இவருக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் பிற நாடுகளிலும் பக்தர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று மாலை இவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கிறார். தற்போது இவருக்கு 82 வயதாகிறது.

Advertisement

ஏற்கனவே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையும் அளித்திருந்தார்கள். இருந்தாலும், தற்போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். இவருடைய மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவருடைய இறப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் இவருடைய மறைவு குறித்து பிரபல ஜோதிடர் செல்வி அவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், ஐயா அவர்கள் ஆன்மீகத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்தியவர் . இவரின் மறைவு பலருக்கும் பேரிழப்பு தான் என்று பங்காரு அடிகளார் புகழ் பாடி இருக்கிறார். மேலும், பங்காரு அடிகளார் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். இவர்களுக்கு ஜிபி செந்தில், ஜிபி அன்பழகன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement