`ரோஜா’ சீரியலின் இளம் நடிகைக்கு கொரோனா – இனி அவரின் கதாபாத்திரம் இனி என்னவாகும்?

0
653
roja
- Advertisement -

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ரோஜா சீரியல் நடிகை அறிவித்து இருக்கிறார். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என்று பல சேனல்களுக்கு இடையே கடும் போட்டியில் நிலவுகிறது. ஆனால், எப்போதும் அதில் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவி முதல் இடம் பிடிக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று.

-விளம்பரம்-

இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும் ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகராக வில்லியும் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : ரவிக்கை அணியாமல் புடவையை சுற்றிக்கொண்டு Oil விளம்பரத்திற்கு போஸ் – பிரகதியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

இந்த சீரியலில் தற்போது வில்லி என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடிக்கிறார். இதற்கு முன்னாடி ரோஜா சீரியலில் வில்லியாக ஷாமிலி என்பவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அக்ஷயா அறிவித்து இருக்கிறார்.

தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுவிட சிரமமாக இருக்கிற காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பதிவிட்டிருக்கிறார். மேலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் எனவும் இன்னும் கொரோனா முழுமையாகக் கட்டுப்படவில்லை. அக்சயா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இனி அவருக்கும் பதில் யார் அனுவாக நடிக்கப்போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement