அன்னையர் தினத்தில் தனது மகனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்த பரீனா (அதுக்குள்ள எப்படி வளந்துட்டாரு)

0
315
Farina
- Advertisement -

அன்னையர் தினத்தில் தனது மகனுடன் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் பரீனா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இருப்பினும் குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார்.

- Advertisement -

விதவிதமான போட்டோ ஷூட் :

கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா. இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கர்ப காலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக நீருக்கு அடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.

வெண்பாவிற்கு பிறந்த ஆண் குழந்தை :

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

-விளம்பரம்-

மீண்டும் நடிக்க வந்த பரீனா :

பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் பரீனா. அதில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருந்தார் பரீனா. இந்த விடியோவை பார்த்த பலர் பரீனாவின் டெடிகேஷனை பாராட்டி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை பரீனாவின் மகனின் பெயர் சூட்டு விழா பிரபல மகனின் ஹோட்டலில் கோலாகளமாக நடைபெற்றுது. மேலும், தன் மகனுக்கு Zayn Lara Rahman என்று பெயர் வைத்துள்ளார்.

எகிப்து கெட்டப்பில் போட்டோ ஷூட் :

கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்டை நடத்திய பரீனா, தன் குழந்தை பிறந்த கொஞ்சம் நாளிலேயே அவரை வைத்தும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அதே தன் கணவர் மற்றும் மகனுடன் எகிப்து லுக்கில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு நிலையில் அன்னையர் தினத்தில் தனது மகனுடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் பரீனா.

Advertisement