பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் குழந்தை லட்சுமி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
பாரதி கண்ணம்மா சீரியல்:
இதற்கு இடையில் சீரியலில் இருந்து கண்ணம்மா தங்கை அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்ற உண்மை பாரதிக்கு தெரிய வந்து விட்டது. இருந்தாலும் பாரதி, ஹேமா என்னுடைய குழந்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
சீரியலின் கதை:
கண்ணம்மாவும் பாரதி இடமே வளரட்டும் என்று சொல்லி விடுகிறார். இதனையடுத்து கண்ணம்மாவிடம் வளரும் லக்ஷ்மி பள்ளியில் பாரதியிடம் நீங்கள் தான் என்னுடைய அப்பா என்ற உண்மையை உடைத்து விடுகிறாள். உடனே பாரதி, கண்ணம்மா விடமும் கோபப்படுகிறார். இதனையடுத்து ஹேமாவிற்கு தன்னுடைய அம்மா யார் என்ற உண்மை தெரிய வருமா? பாரதி, கண்ணம்மாவை ஏற்பாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.
ரக்ஷா குறித்த தகவல்:
இந்நிலையில் கண்ணம்மா குழந்தை ரக்ஷா வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ரக்ஷா. இவர் பிரபல நடிகர் ஷியாமின் மகளாவார். சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஷியாம் என்பது குறிப்பிடத்தக்கது. ரக்ஷா சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரக்ஷா வெளியிட்ட வீடியோ:
அதேபோல் ரக்ஷாவின் அக்காவும் சின்னத்திரை சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கிறார். மேலும், ரக்ஷா தன்னுடைய அக்காவுடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் அடிக்கடி செய்யும் சேட்டை வீடியோக்களையும், நடன வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரக்ஷா தன்னுடைய அக்கா உடன் இணைந்து வீட்டை சுற்றி காட்டி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.