பாரதி கண்ணம்மா – ராஜா ராணி 2 சீரியலின் மகா சங்கமம் ப்ரோமோ, அம்மன் கண்ணில் ரத்தம் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

0
684
rajarani
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ராஜா ரணி – பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர்கள் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க :சினிமாவுக்காக ஏமாத்த முடியாது, சேரி மக்கள் தான்’ – சர்ச்சையில் சிக்கிய பிரிகிடாவின் பேச்சு.திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியல்:

தற்போது சீரியலில் வெண்பா- ரோகித் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது. அதேபோல் ஹாஸ்பிடலில் ராமன், ஜானகியம்மா கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சீரியல் கொஞ்சம் டல்லாகவே சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி ரேட்டிங் குறைந்துள்ளது. இதை சரி செய்யும் விதமாக பாரதி கண்ணம்மா தொடர் வரும் வாரத்தில் மகாசங்கம் எபிசோட்டில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது.

-விளம்பரம்-

மகா சங்கமம்:

அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் ராஜா ராணி 2 சீரியல் உடன் தான் மகா சங்கமம் இணைகிறார்கள். தற்போது ராஜா ராணி சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த மகா சங்கமம் ஒரு மணிநேரம் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி 2- பாரதி கண்ணம்மா தொடர் இணைந்து உள்ளது. இந்த இரண்டு சீரியலின் இயக்குனரும் பிரவீன் தான்.

பாரதி கண்ணம்மா- ராஜா ராணி 2:

ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி நடித்துக்கொண்டிருந்தபோதும், ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்த போதும் மகாசங்கம் எபிசோடை ஒளிபரப்பி இருந்தார்கள். அந்த எபிசோடு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சீரியலில் வினுஷா மற்றும் ரியா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் மகா சங்கமம் ஃபுள் எனர்ஜி உடன் வரும் வாரத்தில் வரப்போகிறது. இந்நிலையில் தற்போது அதற்கான புரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.

மகா சங்கமம் ப்ரோமோ:

அதில், சிவகாமி அம்மாள் சாமியாரிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். என்னிடம் கேட்காதே கடவுளிடம் கேள் என்று சாமியார் சொல்கிறார். அதன்பின் இரண்டு பெண்களை வைத்து மேடையில் இருக்கும் அம்மன் சிலைக்கு தங்க ஆபரணங்களை அணிவிக்க சொல்கிறார். ஆனால், நகைகள் காணாமல் போகிறது. சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை காட்டும்போது சிலையின் கண்களிலிருந்து ரத்தம் வருகிறது. அதை பார்த்து சிவகாமி தான் திருடி இருக்கிறார் என சாமியார் கூறுகிறார். தற்போது புரோமோ வெளியானதைத் தொடர்ந்து இந்த சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Advertisement