‘சினிமாவுக்காக ஏமாத்த முடியாது, சேரி மக்கள் தான்’ – சர்ச்சையில் சிக்கிய பிரிகிடாவின் பேச்சு.திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
526
brigida
- Advertisement -

சேரி மக்கள் குறித்து தவறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரிகிடா. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். அந்த வகையில் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் பார்த்திபன் நடித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘விக்டோரியா’ என்னும் ஜெர்மானிய திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. அது ஆஸ்கர் விருதின் இறுதி பட்டியல் வரை சென்றிருந்தது. தற்போது பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார். அகிரா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு சர்வதேச விருதுகள் குவிந்து வருகின்றது. இதையடுத்து பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

பிரிகிடா பற்றிய தகவல்:

மேலும், இந்த படத்தில் பிரிகிடா தெலுங்கு மொழி பேசும் கதாபாத்திரத்தில் பிரகிடா நடித்து இருப்பார். இவர் ஆஹா கல்யாணம் வெப்சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார். மேலும், நடிகர் விஷாலின் அயோக்யா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முதல் முறையாக வெள்ளித்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் பிரகிடா.

பிரிகிடா நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் பிரகிடா நடித்து அசத்தியிருப்பார். பின் இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். அதோடு இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மேலும், இவர் அடிக்கடி பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இரவின் நிழல் படம்:

தற்போது இரவின் நிழல் படத்தில் இவர் தான் மெயின் லீடாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய சென்றார். ஆனால், இவருக்கு ஹீரோயினி வாய்ப்பு வழங்கிவிட்டார் பார்த்திபன். இந்த படத்தில் முழு முயற்சியும் போட்டு நடித்திருக்கிறார் பிரிகிடா. 19 நொடிகளில் ஓடிக்கொண்டே ஆடையை மாற்றி நடிக்க வேண்டிய சூழல். நிர்வாண காட்சியில் பிரிகிடா நடித்தது பலரையும் வியப்படைய செய்து இருக்கிறது.

சர்ச்சையை கிளப்பிய பிரிகிடாவின் பேச்சு :

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் இரவின் நிழல் படம் குறித்து பேசிய பிரிகிடா, “இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாத்த முடியாது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement