சிவாஜி பட வில்லனின் அழகிய மகளை பார்த்துள்ளீர்களா ? அட, இவர் தான் இவர் மனைவியா.

0
4276
suman
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றாலே சினிமா உலகில் ஒரு தனி மவுஸ். 2டி தொழில்நுட்ப காலம் படங்களில் தொடங்கி 3டி அனிமேஷன் படங்கள் என அனைத்திலுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கே என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் தமிழ் சினிமாவில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

-விளம்பரம்-

அந்த வகையில் ஷங்கர்– ரஜினி கூட்டணியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் சிவாஜி. இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் சுமன். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சுமன். இவர் 1979 ஆம் ஆண்டு தான் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார். இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இவர் சமீப காலமாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் சுமன் மகளின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சுமன் அவர்களின் மகள் பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்திருந்தார். இதைப்பார்க்க நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வந்திருந்தார்கள். அப்போது சுமனின் மகளைப் பார்த்துவிட்டு சுமனுக்கு இவ்வளவு அழகான மகளா! என்று வியந்து சுமன் மகளை கதாநாயகியாக நடிக்க தங்களுடைய விருப்பத்தை கூறினார்கள்.

தற்போது சுமனின் மகளின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்களும் நெட்டிசன்களும் அதிகமாக ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகின்றன. அதோடு கூடிய விரைவில் நடிகர் சுமனின் மகள் திரை உலகிற்கு வருவாரா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement