9 மாத கர்ப்பிணியை சுட்ட கண்ணம்மாவின் மாமியார் – பாரதிகண்ணம்மா இயக்குனரின் கொடூர இயக்கம்.

0
1574
bharathi
- Advertisement -

விஜய் டிவி சீரியல் என்றாலே கதைக்களம் விறுவிறுப்புக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது. அந்த அளவிற்கு பல எதிர்பார்ப்புகளுடன் சீரியல்கள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்பு குறையாமல் போய்க்கொண்டிருக்கும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு திருப்பங்களுடன் இந்த சீரியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த வார காட்சியை கண்டு பல இல்லத்தரசிகள் கொந்தளித்து போய் சீரியல் இயக்குனரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களாகவே சீரியலில் கண்ணம்மா தன்னுடைய இரண்டாவது குழந்தையை தேடும் முயற்சியில் தீவிரமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழ்நிலையில் வெண்பா இதைப் பயன்படுத்திக் கொண்டு பாரதியை கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்க பலமுயற்சிகள் செய்து வருகிறார். பின் வெண்பா கண்ணம்மாவை சந்தித்து உன் குழந்தை இருக்கும் இடம் எனக்கு தெரியும் என்று கண்ணம்மாவை மிரட்டுகிறார். கண்ணம்மாவும் வெண்பா சொல்லும் அனைத்தையும் செய்கிறார்.

- Advertisement -

அப்போது காட்சியில் வெண்பா, கண்ணம்மாவின் குழந்தையை வன்மையான சொற்களால் திட்டியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா தற்போது நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் பரினா இது போன்ற காட்சிகளில் நடிப்பது சரியில்லை என்றும் இயக்குனர் ஏன் இப்படி எல்லாம் வசனங்களை எழுதிக் கொடுக்கிறார் என்றும் இல்லத்தரசிகள் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் தற்போது இந்த வார காட்சியில் பாரதியின் அம்மா சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியில் சுடுவது போன்ற காட்சிகள் வந்துள்ளது. அந்த காட்சியில் சௌந்தர்யா வெண்பாவை சோபாவில் தள்ளி துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் விடுகிறார்.

இந்த காட்சியை கண்ட இல்லத்தரசிகள் அதிர்ந்து போயி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு காட்சியில் நடிக்க வேண்டுமா? ஏன் இவ்வளவு மோசமான காட்சியை இயக்குனர் இயக்கியிருக்கிறார்? வெண்பாவை சீரியலில் இருந்து விலக்க இந்த மாதிரி சுடும் காட்சிகள் எல்லாம் தேவையா? என்று பல்வேறு விதமாக இல்லத்தரசிகள் கொந்தளித்து திட்டி தீர்க்கின்றனர். தற்போது இந்த பாரதிகண்ணம்மாவின் புரோமோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement