ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பேர் கிரில்ஸ். டெலீட் செய்த டிவீட் இதோ.

0
41471
rajini
- Advertisement -

பிரபல தொலைக்காட்சியான டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பேர் கிரில்ஸ். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் காட்டினார் பேர் கிரில்ஸ். அதுமட்டுமல்லாமல் பாம்பு, தேள். புழுக்கள் என்று கண்ணில் தென்பட்டதை எல்லாம் பச்சையாகவே சாப்பிட்டு நமது முகத்தில் சலிப்பை ஏற்படுத்தினாலும் இந்த நிகழ்ச்சி பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-
india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்திய பிரதமர் மோடி பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிலையில் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மைசூர் மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்த திருமண வாழ்கை. மனைவியை பிரிந்த பிரபல நடிகர்.

இந்த நிலையில் பேர் கிரில்ஸ் ரஜினியை சந்தித்தது குறித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு , “பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சி, தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. அதன் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த டீவீட்டை பார்த்த ரசிகர்கள் ரஜினி பாலிவுட் சூப்பர் ஸ்டார் இல்லை கோலியவுட் சூப்பர் ஸ்டார் என்று கூற, உடனே அந்த டீவீட்டை டெலிட் செய்த பேர் கிரில்ஸ், சூப்பர் ஸ்டார் என்று மட்டும் குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார்.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க மேன் vs வைல்டு நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் போது ரஜினிகாந்துக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு ரஜினி மீண்டும் சென்னை திரும்புவதாகவும் தகவல் வைரலாக பரவியது. ஆனால், சென்னை திரும்பியுடன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் ஒரு சில சிராய்ப்புகள் மட்டும் தான் என்று கூறியுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement