கரடி குட்டி, ஆமை – பீஸ்ட் படத்தில் உருவ கேலி: நியாயமா நெல்சன்?

0
462
beast
- Advertisement -

படத்தில் உருவ கேலி செய்வதற்கு சினிமா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
Beast

இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இன்று அனைவரும் எதிர்பார்த்த விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. படத்தில் தீவிரவாத கும்பல் மால் ஒன்றை ஹைஜாக் செய்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அந்த மாலில் விஜய் இருக்கிறார். பின் அந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் மக்களை எப்படி காப்பாற்றுகிறார்? என்பது தான் படத்தின் மீதி கதை. வழக்கம் போல் விஜய் தன்னுடைய அசால்ட்டான நடிப்பு, டயலாக் டெலிவரி, டான்ஸ், ஆக்சன் காட்சிகள் என ஒட்டு மொத்தமாக ஸ்கோர் செய்து இருக்கிறார்.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

சொல்லப்போனால் மொத்த படத்தையும் விஜய் தான் தாங்கி நிற்கிறார். மேலும், இரு காட்சிகள் ஓடி முடிந்து விட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் படம் திருப்தியாக உள்ளது என்றும் சிலர் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்று மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆகமொத்தம் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் உருவ கேலி செய்திருப்பது வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

beast

சினிமா உலகில் உருவ கேலி குறித்த தகவல்:

பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி காலத்திலிருந்து உருவ கேலி செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. சந்தானம் நடிகரான காலகட்டத்தில் உச்சம் பெற்று தற்போது வரை உருவ கேலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் யோகி பாபு வைத்து உருவ கேலி எல்லை மீறல்கள் அதிகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மான் கராத்தே, யாமிருக்க பயமே போன்ற படங்களில் யோகி பாபு குறித்து பண்ணி மூஞ்சு வாயான், குரங்கு குட்டி, கரடி என்று விதவிதமான பெயர்களை வைத்து கிண்டல் செய்திருந்தனர். மேலும், நிறம், எடை, உருவம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு யாரையும் புண்படுத்த கூடாது.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தில் உருவ கேலி சர்ச்சை:

அது மனித நேயமற்றது என்று பலரும் சொல்லப்பட்டு வந்தாலும் திரையில் இந்த நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தவறான முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது என்கிற பொறுப்புணர்வும், சமூக அக்கறையும் படைப்பாளிகளுக்கு இருப்பதை அவர்கள் உணர மறுத்து விடுகிறார்கள். எந்த எல்லைக்கும் சென்று சக நடிகர்களை காமெடி என்ற பெயர்களில் மட்டம் தட்டுகிறார்கள். டாக்டர் படத்தில் கூட யோகி பாபு கலாய்ப்பதும், யோகி பாபு மற்றவர்களை கலாய்ப்பதும் கிண்டல் செய்வதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் யோகி பாபு மீது உருவ கேலி வந்துள்ளது. படத்தில் மூதாட்டி ஒருவர் கரடி குட்டி, நாய் குட்டி என்றும் பெடிகிரி சாப்பிடுகிறாயா என்றும் கேவலமாக பேசி தீட்டி உள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் சினிமா ஆர்வலர்கள்:

ஆனால், இதையெல்லாம் எப்படி இயக்குனர் நெல்சன் அனுமதித்தார்? என்று தெரியவில்லை. இந்த வசனத்தை எதற்காக வைத்தார் என்றும் தெரியவில்லை? இப்படி ஒருத்தரை கிண்டல் கேலி செய்து நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைக்க வேண்டுமா? சகமனிதனை இப்படியா காமெடி என்ற பெயரில் தரக்குறைவாக விமர்சனம் செய்து காயப்படுத்துவது. இந்த மாதிரியான விமர்சனங்கள் எல்லா நடிகர்களின் படங்களிலும் தலைத்தூக்கி உள்ளது. உண்மையில் இது போன்ற மட்டமான செயல்களையும் நகைச்சுவை என்ற பெயரில் விமர்சிப்பதை படைப்பாளிகள் இயக்குனர்கள் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சினிமா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement