நீங்க போனா பிக் பாஸ் பாப்பேன், என் 50 ஓட்டும் உங்களுக்கு தான்னு விஜய் சொன்னார் – வீடியோ இதோ.

0
358
vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து இருந்தது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாமல், கலவரம் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனிடையே பீஸ்ட் படத்தில் காயத்ரி ஷான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ஷான். இதன் மூலம் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : ஒன்றல்ல இரண்டு பிளாட் – சென்னையில் பல முக்கிய பிரபலங்கள் இருக்கும் ஏரியாவில் வாங்கிய நயன்தாரா

- Advertisement -

இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அப்போது அவர் விஜய் குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது, பீஸ்ட் படத்தில் நடிப்பது, அதுவும் விஜய் சாருடன் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இந்த தகவல் படக்குழு அனைவருக்குமே தெரியும். இதை பற்றி கேள்வி பட்ட விஜய் சார் என்னிடம் வந்து, கமல் சார் நிகழ்ச்சி தானே, போறீங்களா? ஓகேவா? நான் நிகழ்ச்சியை அவ்வளவா பார்ப்பதில்லை.

நீங்கள் செல்கிறீர்கள் என்றால் நான் கண்டிப்பாக பார்ப்பேன். என்னுடைய 50 ஓட்டும் உங்களுக்கு தான் என்று கூறினார். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. பின் அடுத்த நாள் வந்த உடனே என்ன முடிவு செய்தீர்கள் என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். நான் செல்லவில்லை என்று சொன்னேன். அதற்கு அவர் சரி ஓகே என்று சொல்லி சென்றுவிட்டார் என்று கூறி இருந்தார். இப்படி இவர் கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement