ஒன்றல்ல இரண்டு பிளாட் – சென்னையில் பல முக்கிய பிரபலங்கள் இருக்கும் ஏரியாவில் வாங்கிய நயன்தாரா

0
395
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஒரு சமீபகாலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நயன்தாரா நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தருகின்றது. அதோடு தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா– விக்னேஷ் சிவன் காதல் குறித்து அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

தற்போது தமிழ் சினிமா உலகில் ட்ரெண்டிங் ஜோடியாக திகழ்வது விக்னேஷ் சிவன்– நயன்தாரா தான். இவர்களுடைய கல்யாணம் எப்போது? என்று ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் ஆவலோடு காத்து கொண்டு இறக்கிறார்கள். மேலும், இவர்களுக்கு சமீபத்தில் தான் யாருக்கும் தெரியாமல் நிச்சியதார்தம் முடிவடைந்தது. இது ஒரு பக்கமிருக்க நயனும், விக்னேஷ் சிவனும் படங்களில் பிஸியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி பரபரப்பாக இருக்கும் இவர்கள் இருவரும் ரிலாக்ஸ் ஆன பிறகு தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் சென்னையில் இருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் குடியேற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து நயன்தாராவின் நெருங்கிய நண்பர்கள் கூறியது, இவர்கள் திருமணம் செய்து முடிந்த பிறகு சென்னையில் செட்டிலாக இருப்பதாகவும், அதற்கு ஏற்ப அமைதியான சூழலில் ஒரு வீடு வாங்க ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இப்ப இவர்கள் குடியிருக்கும் எழும்பூர் பிளாட்டை விட சிறந்ததாக ஒரு வீடு வாங்க வேண்டும் என தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போ தான் சென்னையின் பிரபல கட்டுமான நிறுவனமான போயஸ் கார்டனில் எழுப்பி வரும் பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்கள். பிறகு நயனும், விக்னேஷ் சிவனும் அந்த பிளாட்டை பார்த்து இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனதால் உடனடியாக ஒன்று அல்ல இரண்டு பிளாட்டுகள் புக் செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது. இப்போது அந்த அபார்ட்மெண்ட் வேலைகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அதனால் சீக்கிரத்திலேயே அந்த பிளாட்கள் இவர்களுக்கு சொந்தமாகும். மேலும், படங்கள் முடிந்தவுடன் இவர்கள் கல்யாணமும் முடிந்து போயஸ் கார்டனில் குடியேற இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் குடியேறி இருக்கும் பகுதியில் லேடி சூப்பர் ஸ்டார் குடியேற போகிறாரா!!! என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement