நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட பீஸ்ட் பட நாயகி பூஜா ஹேக்டே.

0
617
pooja
- Advertisement -

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

-விளம்பரம்-

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது. அதில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே.

இதையும் பாருங்க : வனிதாவுடன் ஜோடியாக நடித்து வந்த பட ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து – பரிதாப நிலையில் மருத்துவமனையில் பவர் ஸ்டார்

- Advertisement -

தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த பூஜா ஹெக்டே, அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். ‘இந்தி, தெலுங்கு என்று பிசியாக நடித்து வரும் பூஜா சமீபத்தில் அல்லு அர்ஜுனாவுடன் இவர் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற தெலுங்கு படம் வெளிவந்து மெகா ஹிட்டானது.

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. பூஜா ஹேக்டே, இதுவரை படங்களில் பெரிதாக பிகினியில் தோன்றவில்லை என்றாலும் சமூக வலைதளத்தில் அடிக்கடி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்ற இவர் பிகினி உடைகளில் புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement