தமிழ் சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஸ்ரீனிவாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழில் லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா,ஐ , கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பவர் ஸ்டார் மிகவும் பிரபலமடைந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் அக்குபஞ்சர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா மீது இருந்த மோகத்தால் இவர் தானே ஒரு படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தார். இதில் கொடுமை என்னவென்றால் ஒரு திரையரங்கில் அந்த படத்தை 100 நாட்கள் ஓட வைக்க இவரே பணம் கொடுத்து அந்த படத்தை ஓட வைத்துள்ளார் என்பது தான். தமிழ் சினிமாவில் தனக்கு போட்டி ரஜினி தான் என்று சபதம் எடுத்து இறங்கிய பவர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து எந்திரன் படத்தில் கூட நடித்தார்.
இதையும் பாருங்க : ‘பர்ஸ்ட் நைட்ல’ என்ன பண்ணுவீங்க – செய்தியாளரிடம் கேள்வி எழுப்பிய பிரபல நடிகை.
அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘பிக்கப் டிராப்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கினர். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சர்ச்சை நாயகி வனிதா நடித்து வந்தார். இந்த நிலையில் பவர் ஸ்டார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது.
இதனால் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தெரிவித்த பவர் ஸ்டார் பிக்கப் பட ஷூட்டிங்கின் போது கீழே விழுந்து அடிபட்டது. அப்போது எனக்கு எதுவும் வலி தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் வலி ஏற்பட்டதால் ஹாஸ்பிட்லுக்கு வந்து பரிசோதனை செய்து பார்த்த போது எனக்கு முதுகு தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இப்போ கொஞ்சம் பரவாயில்ல, இன்னும் ஒரு சில நாளில் டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்’ என்று கூறியுள்ளார்.