தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் இதுவரை 600-க்கும்அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தன் தந்தையை போல் இவரும் மிக சிறந்த பாடகர். இவர் சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் யுகேந்திரன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் நீங்களும் வெங்கட் பிரபுவும் நல்ல நெருங்கிய நண்பர்கள். ஆனால், வெங்கட் பிரபு படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என்று கேள்வி கேட்டார்கள்.

அதற்கு யுகேந்திரன் அவர்கள் கூறியது, சென்னை-28 படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வரைக்கும் நான் அவர்கள் கூடத் தான் இருந்தேன். ஏரியாக்குள்ள கிரிக்கெட் ஆடிட்டு இருந்த பசங்களை எல்லாம் அழைத்துட்டு வந்து ஆடிஷன் பண்ணோம். ஜெய் நடித்த கேரக்டருக்கு முதலில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பேசிட்டு இருந்தப்ப தான் நான் வெங்கட் பிரபுகிட்ட ஜெய் பேரை சொன்னேன். ஏன்னா, பகவதி படத்தில் என்கூட ஜெய் நடிச்சிருந்தான்.

இதையும் பாருங்க : சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த செம்பருத்தி சீரியல் நடிகர் – இவங்க தான் பொண்ணு.

Advertisement

அவனை பார்க்கிறதுக்கு விஜய் மாதிரி இருப்பான். நம்ம சம்பத் அண்ணா பையன்டா என்ட்ரி சொல்லி தான் அவனை படத்துக்குள் கொண்டு வந்தேன். நிதின் சத்யாவும் என்னோட ஃபிரெண்ட் தான். அவனையும் படத்துக்குள் கொண்டு வந்தேன். ஆனால், படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். அதனால் தான் அந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்தடுத்த படங்களில் நான் நடிக்கிற மாதிரி சூழல் வரும். ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களால் அந்த படங்கள் மிஸ்ஸாகிடும்.

இது தொடர்ந்து நடந்துகிட்டே இருந்தது. தற்போது சிம்புவின் மாநாடு படத்தில் கூட எனக்கு ஒரு கேரக்டர் இருந்தது. அதுவும் கடைசி நேரத்தில் மாறி விட்டது. நானும் சினிமாவில்இருந்ததுனால் உள்ளுக்குள்ள என்னென்ன வேலைகள் நடக்கும் என்று தெரியும். வெங்கட் பிரபுவுக்கு என்னை நடிக்க வைக்கணும் என்ற ஆசை இருந்தாலும் மத்தவங்க ஏதாவது ஒண்ணு சொல்லுவாங்க. அப்படித்தான் இந்த வாய்ப்புகள் எல்லாமே மிஸ்ஸாகிப்போனது. எனக்கு நடிக்கிறது ரொம்ப பிடிக்கும். அதனால் அவன் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கப் போய்டுவேன் என்று கூறினார்.

Advertisement
Advertisement