நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. தற்போது இருக்கும் சூழ்நிலையில் தம்பி ராமையா அரசியளுக்கு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ரஜினி கமல் ஆகியோர் நேரடி அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டனர்.
அவர்களை தொடரத்து கே.எம்.ஜி.ஆரின் தீவிர அபிமானி பாக்யராஜ் நேரடி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் இருந்த போது அவருக்குக்காக இங்கு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தவர் கே.பாக்யராஜ். அந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. எம்.ஜி.அவருக்கு மிகவும் பிடித்தவர்களில் ஒருவர்.
எம்.ஜ.ஆரின் மறைவுக்கு பின்னர் ஜெயலிதா அணி மற்றும் ஜானகி அணி என இரண்டாக உடைந்தது அதிமுக. அதில் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி அணிக்கு நேரடியாக ஆதரவு அளித்தவர் பாக்யராஜ்.
அதன் பின்னர் மக்கள் தமிழ் தேசம் என்னும் கட்சியை 2000ஆம் ஆண்டு துவங்கினார். பின்னர் அடுத்த சட்ட மன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் பாக்யராஜ்.
அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தவர் தற்போது முழு நேர அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அவருடைய ஆதரவு மற்றும் கொள்கை நிலைப்பாட்டை இன்னும் ஒரு மாதத்திற்குள் அறிவிக்கவுள்ளார் கே.பாக்யராஜ்.