சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவை அடுத்து நதிகள் ஏற்படும் மரணம் குறித்து இயக்குனரும் நடிகருமான பாக்ய ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகரின் முன்னாள் மேயர் துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே ஒலிக்கிருக்கிறது கடந்த பிப்ரவரி நான்காம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் இன்னவோர் மாவட்டத்தில் உள்ள வாங்கி நாளா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி துரைசாமியின் கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்படியே விழுந்துள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது அவரது உடலை மீட்புக்குழிவினர் தேடி வந்தனர்.

Advertisement

விபத்து நடந்து ஒரு வாரம் மேலாகியும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படாததால் தன் மகன் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில்  வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.

வெற்றி துரைசாமியின் உடல் இன்று (பிப்.13) சென்னை கொண்டுவரப்படுகிறது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் கூட வெற்றி துரைசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இப்படி ஒரு நிலையில் நதிகள் ஏற்படும் மரணம் குறித்து இயக்குனரும் நடிகருமான பாக்ய ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் பேசியுள்ள அவர் ‘ கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்பாரம்பாளையம் எனும் ஆற்றுக்கரையில் அடிக்கடி படப்பிடிபுக்கு செல்வோம். அங்கு குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலாவிற்காக பலர் வந்து செல்வதுண்டு. அப்படி வருபவர்கள் ஆற்றங்கரையில் குளிப்பதும் உண்டு. நதியில் இறங்கி குளிப்பவர்கள் அப்படியே காணாமல் போய் விடுவார்கள். அப்படி ஒருமுறை நான் இருக்கும் நேரத்திலும் கூட நிகழ்ந்துள்ளது.

நதியில் ஏற்படும் சுழலில் சிக்கி அவர்கள் இறந்திருக்கலாம் என அருகில் இருந்தவர்கள் கூறியதால், எப்படியாவது உடலை மீட்டு தர கூறி உறவினர்கள் கேட்கும் போது அதற்கு ஏற்றவாறு பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுவார்கள். அதன் பிறகு உடலை மீட்டுத்தருவார்கள்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement